கோஸ்டாஸ் லாபவிட்சாஸ் (Costas Lapavitsas) (ஜனவரி 20, 1961இல் கிரீஸ் நாட்டில் பிறந்தவர்) லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் பணம் மற்றும் நிதியின் அரசியல் பொருளாதாரம், ஜப்பானியப் பொருளாதாரம், பொருளாதார சிந்தனையின் வரலாறு, பொருளாதார வரலாறு மற்றும் சமகால உலகப் பொருளாதாரம் குறித்துப் பல தளங்களில் ஆராய்ச்சியினைச் செய்துள்ளார். 2010 முதல், அவரது ஆராய்ச்சி யூரோப்பகுதியின் பொருளாதார நெருக்கடியினை பற்றியதாக இருந்தது.
கிரேக்கத்தில் செலுத்து நிலை இருப்பில் சிக்கல் உருவானதால் நடப்புக் கணக்கு மற்றும் முதன்மை அரசாங்கப் பற்றாக்குறைகளால் தூண்டப்பட்ட நிலையினால் பொருளாதார நெருக்கடியாகத் தொடங்கியது. இதனால் பொருளாதார மற்றும் சமூகக் குழப்பம் அதிகரித்தது, தொடர்ந்து உள்நாட்டு ஜெர்மன் ஊதிய கொள்கைகள் காரணமாக, யூரோ மண்டலத்திற்குள் போட்டித்தன்மை இழப்பினை எதிர்கொண்டது. யூரோ மண்டல நிலையற்ற தன்மைக் காரணங்களுக்காகக் கடன் வழங்குநர்களால் முதன்மையாக விதிக்கப்பட்ட பிணையினைக் குறிப்பிடப்படுகிறது.
கிரேக்கச் சமூகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைச் சரி செய்து நிலையான பொருளாதார வளர்ச்சியினை அடையப் பின்பற்றப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கல் கொள்கைகள், பொருளாதாரம் மற்றும் சமூகம் இரண்டிலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியது. கிரேக்கச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் “வரலாற்றுக் கூட்டமைப்பு”, பயம் மற்றும் அடையாள உணர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக இறையாண்மையைக் கைவிட்டு, நிதி உதவி பெறும் உத்திக்கு விருப்பத்துடன் அடிபணிந்தது. லாபவிட்சாஸ் நிதியமாக்கல் குறித்த அவரது ஆய்வானது பொருளாதார இலக்கியத்தில் ஒரு நிலையான ஆதாரமாக மாறியுள்ளது.
லாபவிட்சாஸ் 2023இல் “முதலாளித்துவத்தின் நிலை”, என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நிதிமயமாக்கல், புதிய தாராளமயம், அரசின் அதிகாரம் மற்றும் அமெரிக்கப் பேரரசின் வளர்ந்து வரும் முகங்கள் மற்றும் இடதுசாரிகள் எவ்வாறு தகவமைத்துப் பதிலளிக்க வேண்டும் என்பது பற்றிய நேர்த்தியான மற்றும் விரிவான பகுப்பாய்வை இப் புத்தகம் முன்வைக்கிறது. மேலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலக முதலாளித்துவத்தின் மாற்றம் குறித்து லாபவிட்சாஸ் ஒரு பொதுவான அறிவார்ந்த, கூர்மையான வாதத்தை முன்னெடுத்தார். இந்த மாற்றங்கள் நாம் இப்போது வாழும் நிரந்தர நெருக்கடியின் சகாப்தத்தின் அடித்தளத்தை எவ்வாறு கட்டமைக்கின்றது என்பதைக் காட்டுகிறது.
ஆதாரம்: www.ineteconomics.org; www.journals.sagepub.com ; www.versobooks.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

