ஜனவரி 21 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜானோஸ் கோர்னை (Economist Janos Koranai Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜானோஸ் கோர்னை – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜானோஸ் கோர்னை (Janos Koranai)  ஜனவரி 21 , 1928இல் பிறந்த ஹங்கேரிய பொருளாதார அறிஞர் ஆவார். பற்றாக்குறை, சமதர்ம (சோசலிச) பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் முன்னோடி ஆய்வாளராகக் கருதப்படுகிறார். தொடர் பற்றாக்குறைக்கான காரணம் திறனற்ற தொழிலாளர்களால் ஏற்படுவதன்று மாறாக திட்டமிடுபவர்களால் ஏற்படுவதாகும் என்று கோர்னை கணித்திருந்தார்.

இழப்பில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒருபோதும் மூடப்படாது, அவர்கள் அரசாங்க மானியங்களை எளிதாகப் பெற்றனர், தொடர்ச்சியான இழப்புகள் இருந்தபோதிலும் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடிந்தது இதனால்தான் பற்றாக்குறை எழுந்தது என்று குறிப்பிட்டார்.

சமதர்ம மைய திட்டமிடல் பற்றிய 1971ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “சமநிலை எதிர்ப்பு”, என்ற புத்தகத்தில் கோர்னை தனது கருத்துக்களை வெளியிட்டார். மைய திட்டமிடப்பட்ட சந்தையானது பொருளாதார சமநிலைக் கோட்பாட்டின் மூலம் சமநிலைக் கோட்பாட்டின் மாதிரி என்ற மேற்கத்தியக் கல்வியியல் கருத்துக்கு எதிராக இப் புத்தகம் எழுதப்பட்டது.

சமதர்ம பொருளாதாரங்களின் யதார்த்தத்தைப் பகுப்பாய்வு செய்யும் முக்கிய நோக்கத்துடனே கோர்னையின் ஆய்வுகள் காணப்படுகின்றது. அவர் புள்ளிவிவரங்கள் மற்றும் கள அடிப்படை அனுபவத்தைக் கொண்டு கோட்பாடுகளாக உருவாக்கினார். அவரது அணுகுமுறை பிரதான பொருளாதாரக் கோட்பாட்டின் பகுத்தாய்வு கொள்கைகளுடன் முரண்பட்டது.

அவரின் மிகை மையப்படுத்தல் என்ற புத்தகத்தில், பொருளாதாரத்தில் அதிகப்படியான மையப்படுத்தும் திட்டமிடல் அதீத சிக்கல்களை உருவாக்கும் என்றும் பொது துறையின் ஆதிக்கம் காணப்படும், அளவீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும், இதனால் செயல்திறன் பாதிக்கப்படும் என்றார்.

1990ஆம் ஆண்டில், “தடையற்ற பொருளாதாரத்திற்கான பாதை” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் தனியார்மயமாக்கல் செயல்முறையை ஆதரித்தும், தனியார்மயமாக்கலின் படிப்படியான வளர்ச்சி குறித்தும் இப்புத்தகத்தில் விவாதித்துள்ளார். கோர்னை அக்டோபர் 18ஆம் நாள் 2021இல் தனது 93 வயதில் மறைந்தார்.

ஆதாரம்: www.ceu.edu ; www.cepr.org; www.theguardian.com; www.hungarianconservative.com

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *