பீட்ரைஸ் வெப் (Beatrice Webb) ஜனவரி 22, 1858இல் பிறந்த பிரித்தானியச் சமூகவியலாளர், பொருளாதார அறிஞர், பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி போன்ற பன்முக ஆற்றல் படைத்தவராக அறியப்படுகிறார். பீட்ரைஸ் வெப் 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லண்டன் பொருளாதாரப் பள்ளியின் நான்கு நிறுவனர்களில் (சிட்னி, கிரஹாம் வாலஸ், ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவுடன்) ஒருவர் ஆவர்.
தனது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூகத்தில் அடித்தட்டு உள்ள மக்கள் மீது பின்பற்றப்பட்ட சமூக வேறுபாடுகளைப் போக்க முன்னோடி கருத்துக்களை வழங்கியுள்ளார். வளர்ந்து வரும் அறிவுசார் கருத்துக்கள் வழியாக அவர்களின் வாழ்வினை மேம்படுத்த ஃபேபியன் சொசைட்டியை (Fabin Society) என்ற அமைப்பினை உருவாக்கினார். இது அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தினை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
1891ஆம் ஆண்டில், லங்காஷயரில் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறந்த, தி கோஆபரேட்டிவ் மூவ்மென்ட் இன் கிரேட் பிரிட்டன் (The Cooperative Movement in Great Britain) என்ற புத்தகத்தை வெளியிட்டார். கூட்டுறவின் தனித்துவம், உற்பத்தியாளர்கள் மற்றும் பகிர்வாளர்கள் அமைப்புகளை உருவாக்குவதன் அவசியம், தன்னார்வமாகத் தகவல்களை கூட்டாட்சி அரசாங்கத்திடம் பகிர்ந்துகொள்ளுவதன் வழியாகப் பொருளாதார தூண்டலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி இப் புத்தகம் வலியுறுத்துகிறது.
கூட்டுறவு கூட்டாட்சி தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் கூட்டுப் பிரச்சினைத் தீர்வை வலியுறுத்துகிறது. “கூட்டுப் பேரம்” என்ற சொல்லை பீட்ரைஸ் வெப் உருவாக்கினார், இது பொதுவாக தொழிலாளர்களின் ஊதியங்கள், வேலை நேரங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்து ஒரு முதலாளிக்கும் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து வரையறுக்கிறது. சமூக சேவைகள் மூலம் எந்தவொரு நிதி தடைகளும் இன்றி தனிநபர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
1932ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தின் அழைப்பின்பேரில் பீட்ரைஸ் வெப் அந்த நாட்டிற்கு சென்றார். ஸ்டாலினின் கம்யூனிச அமைப்பில் அரசியல் சுதந்திரம் இல்லை என்பதை அவர் ஏற்கவில்லை. சோவியத் குடிமக்களுக்குக் கிடைக்கும் சுகாதாரம், சமூக மற்றும் கல்விச் சேவைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் அவர் முழுமையாக ஈர்க்கப்பட்டார்.
பெண்களின் மேம்பாட்டிற்கு, அவர்கள் அரசியலில் பங்கேற்கவும், அவர்களின் பொருளாதார நிலையினை உறுதி செய்யவும், சமூக மற்றும் சட்ட சமத்துவத்தை உறுதி செய்யும் சட்டங்களையும் சோவியத் ஒன்றியம் செயல்படுத்தியது. ஸ்டாலின் செயல்படுத்திய பொருளாதார அமைப்பு தனிப்பட்ட நுகர்வை விட சமூக நுகர்வை மையமாகக் கொண்டிருப்பதால் இது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவும் என்று வெப் நம்பினார். பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூகக் கொள்கை உருவாக்கம் மூலம் உலகிற்கு அவர் அளித்த பங்களிப்புகளை இன்றும் காண முடிகிறது. பீட்ரைஸ் வெப் ஏப்ரல் 30ஆம் நாள் 1943இல் மறைந்தார்.
ஆதாரம்: www.britannica.com; www.blogs.lse.ac.uk; www.rethinkingpoverty.org; www.hist259.web.unc.edu
******************************************************************************
ஜான் மெக்மில்லன் (John McMillan) ஜனவரி 22, 1951இல் பிறந்து மார்ச் 13, 2007இல் மறைந்த நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர். இவர் டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றினார். மேக்மில்லன் உலகின் முன்னணி பொருளாதாரக் கோட்பாட்டாளர்களில் ஒருவராகவும் மற்றும் பேரியல் பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். ஏலங்களின் பொருளாதாரம், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சந்தை நிறுவனங்கள் அவரது ஆய்வுக் களமாக இருந்தது. ஸ்பெக்ட்ரம் மற்றும் பிற உரிமைகளை ஏலம் விடுவதன் மூலம் உலகளவில் அரசாங்கங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களைத் திரட்டக்கூடிய கொள்கைகளை வடிவமைப்பதில் அவரது ஆய்வு கவனம் பெற்றிருந்தது.
நுண்ணியல் பொருளாதாரக் கோட்பாட்டிற்கு அவர் முக்கிய பங்களிப்புகளை அளித்துள்ளார், ஆனால் அவரது திறமை உண்மையான உலகப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்குத் தனது கோட்பாட்டைப் பயன்படுத்தி தீர்வு காண முயற்சி செய்தார். 2002ஆம் ஆண்டு அவரது “ரீஇன்வென்டிங் தி பஜார்” (Reinventing the Bazaar) என்ற புத்தகம் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகமாக மதிப்பாய்வு செய்தது. சந்தைகள் பல இடங்களில் சிறப்பாகவும் மற்றவற்றில் மோசமாகவும் செயல்படுகின்றன, என்பதைப் புரிந்துகொள்வது உலகளவில் மேம்பட்ட செழிப்பை அடைவதற்கு மிக முக்கியமான வழி என்று கருதினார். அவர் மெக்காஃபியுடன் (McAfee) இணைந்து முன்னோடி தத்துவார்த்த ஆவணங்களை எழுதினார், அவற்றில் இரண்டு தனித்தன்மையுடையதாகும். முதலாவது, எஸ்டேட் விற்பனையில் ஏலம் எடுக்கும் பழங்கால வியாபாரிகளின் குழுக்கள் போன்ற ஏல வளையங்களால் எவ்வளவு கூட்டுச் சதித்திட்டத்தை அடைய முடியும் என்பது பற்றியது. இரண்டாவது, அரசாங்க கொள்முதலின் சூழலில், நிறுவனங்கள் ஒப்பந்தங்களுக்கு ஏலம் எடுக்கும்போது எழும் பிரச்சினைகள், அங்கு வெற்றி பெற்ற நிறுவனத்தின் ஏலத்திற்குப் பிந்தைய செயல்திறன் போன்றவை ஆகும்.
ஆதாரம்: www.obituaries.paloaltoonline.com; www.web.stanford.edu; www.dbpedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

