ஆர்தர் லூயிஸ் (Arthur Lewis) ஜனவரி 23, 1915இல் பிறந்த செயிண்ட் லூசியன் பொருளாதார அறிஞர் ஆவார். 1979 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா, ஆசியா, கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மாற்றம் குறித்த பகுப்பாய்விற்காகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்ற முதல் கறுப்பின மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதல் கறுப்பினப் பேராசிரியரும் இவரே. ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய இவர் உலகில் பல நாடுகளுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
லூயிஸ் மாதிரி
லூயிஸ் 1954ஆம் ஆண்டு “பொருளாதார மேம்பாட்டுடன் வரம்பற்ற தொழிலாளர் அளிப்பு” (Economic Development with Unlimited Supplies of Labour) என்ற தனது புத்தகத்தில் இரட்டைத் துறை மாதிரியை வடிவமைத்துள்ளார். ஒப்பீட்டளவில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கான வரைவினை லூயிஸின் மாதிரி வழங்கியது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் பண்புகளில் ஒன்று, அவற்றின் பொருளாதாரங்கள் அடிப்படையில் “வாழ்வாதாரத் துறைகளை”க் கொண்டிருப்பதாகக் கருதுகிறது, இதில் தொழிலாளர் அளிப்பானது மிகப்பெரியது ஆனால் ஒரு தொழிலாளிக்கு முதலீடு செய்யப்படும் மூலதனத்தின் அளவு மிகக் குறைவு.
லூயிஸின் கூற்றுப்படி, ஒரு ஏழ்மையான நாட்டின் பொருளாதாரம் இரண்டு துறைகளைக் கொண்டதாக உள்ளது, ஒன்று, சிறிய “முதலாளித்துவ” துறை மற்றும் மற்றொன்று மிகப் பெரிய “பாரம்பரிய” (வேளாண்மை) துறை என்பதாகும். முதலாளித்துவத் துறையில் உள்ள முதலாளிகள் பணம் ஈட்டுவதற்காக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். ஆனால், பாரம்பரியத் துறையில் உள்ள வேலை அளிப்பவர்கள் உச்ச லாபத்தை இலக்காக கொள்ளாமல், அதிக அளவிற்குத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவார்கள் இதனால், அவர்களின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவாக இருக்கும்.
குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வளர்ச்சியைத் தூண்டுவதற்கான வழிமுறையினை கண்டுள்ளார், அது உழைப்பினை உற்பத்தியாக மாற்றுவதாகும், அங்கு அது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றமடையும் என்ற வாதத்தை முன்மொழிந்தார். ஏன் சில நாடுகளில் வறுமை சுழற்சியில் தொடர்கின்றன என்பது பற்றி தனது பொருளாதார மேம்பாடு மற்றும் கோட்பாடுகள் ஆய்வுகள் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். ஏழைகளைக் களைவதற்குப் பதிலாக, அவர்களின் மேம்பாட்டிற்கு முதலீடு செய்வது பலனளிக்கும் இது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவும் என்கிறார்.
ஏழ்மையான நாடுகளில் ஏற்றுமதிகளில் ஏகபோக சக்தி மறைந்துள்ளது, இந்த சுரண்டல்களை இனம்காணப்படாமல் உள்ளது என்று லூயிஸ் வாதிட்டார். இந்த நாடுகள் ஏற்றுமதிக்குப் பதிலாக உணவு உற்பத்திக்கானதாக மாற்றுவது சிறப்பானதாக இருக்கும் என்றார். இதனால் ஏழ்மை குறையும் என்று அவர் வாதிட்டார். லூயிஸ் ஜூன் 15ஆம் நாள், 1991இல் மறைந்தார்.
ஆர்தர் லூயிஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
- “Economic Survey 1919–1939”
- “Economic Development with Unlimited Supplies of Labour”
- “The Theory of Economic Growth”
- “ Politics in West Africa”
- “The Slowing Down of the Engine Growth”
ஆதாரம்: www.britannica.com; www.ubs.com; www.unesco.org; www.investopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

