ஜனவரி 24 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் (Economist Oskar Morgenstern Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் (Oskar Morgenstern) ஜனவரி 24, 1902இல் பிறந்து ஜூலை 26, 1977இல் மறைந்த ஜெர்மனிய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். ஜான் வான் நியூமனுடன் சேர்ந்து மோர்கென்ஸ்டெர்ன் ஆட்டக் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில், பொருளாதார கணிப்பு மற்றும் பொருளாதார போக்கின் வரம்புகள் குறித்த ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.

1944ஆம் ஆண்டு ஜான் வான் நியூமன் மற்றும் ஆஸ்கர் மோர்கென்ஸ்டெர்ன் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஆட்டக் கோட்பாடு மற்றும் பொருளாதார போக்குக் கோட்பாடு, அடிப்படையில் பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் ஒரு புரட்சிகரமான கணிதக் கோட்பாட்டை உருவாக்கியது. 1950ஆம் ஆண்டு “பொருளாதார கவனிப்பு துல்லியம்” (On the Accurracy of Economic Observations) என்ற புத்தகத்தில், பொருளாதாரத்தின் நிலையை அறியவும் பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் தேசிய வருமானத் தரவினைப் பயன்படுத்துவதை மோர்கென்ஸ்டெர்ன் தனது எதிர்ப்பினை பதிவுசெய்துள்ளார்.

பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான ஆலோசகர்கள் பெரும்பாலும் 1% அல்லது அதற்கும் குறைவான தேசிய வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே கொள்கைகளை முன்மொழிந்ததாக மோர்கென்ஸ்டெர்ன் சுட்டிக்காட்டினார். இந்த தவற்றினால் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் எந்த ஒரு முடிவுகளையும் எட்ட முடியாது என்று விளக்கியுள்ளார். மோர்கென்ஸ்டெர்ன் பல்வேறு ஆய்வுகளில் களங்களில் தொடர்ந்து பணியாற்றினார், குறிப்பாக வான் நியூமன் பல் துறை வளர்ச்சி மாதிரி, தேசியப் பாதுகாப்பு, பொருளாதார தரவு மற்றும் நிதி, போன்றவை ஆகும். மோர்கென்ஸ்டெர்னின் ஆராய்ச்சியானது அதிக அளவில் பொருளாதார கணிப்பு தொடர்புடையதாகும்.

ஆதாரம்: www.britannica.com; www.econlib.org ; www.mathshistory.st-andrews.ac.uk ; www.hetwebsite.net; www.encyclopedia.com

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *