பிபேக் டெப்ராய் (Bibek Debroy) ஜனவரி 25, 1955இல் பிறந்து நவம்பர் 1, 2024இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். ஆட்டக் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாடு, வருமானம் மற்றும் சமூக சமத்துவமின்மை, வறுமை, சட்ட சீர்திருத்தம் மற்றும் ரயில்வே சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் பல்வேறு அரசு குழுக்களிலும் ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்து கொள்கையினை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஜனவரி 2015லிருந்து ஜூன் 2019முடிய நிதி ஆயோக்கின் உறுப்பினராகவும், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் ஆலோசகராக 2017லிருந்து 2024முடியச் செயல்பட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை சேம்பரில் பொதுச் செயலாளராகவும், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் பல்வேறு அரசு குழுக்களில் பணியாற்றியுள்ளார்.
அரசுக்கான பொதுக் கொள்கை மற்றும் பொருளாதார மேலாண்மைக்குப் பெருமளவிற்கு டெப்ராய் பங்களிப்பினை செய்துள்ளார். சமூக-பொருளாதார போக்குகள், மத்திய மற்றும் மாநிலங்களின் நிதி தொடர்பு, வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள தடைகள், பொருட்கள் மற்றும் சேவை வரியை நெறிப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் புள்ளிவிவர அமைப்பில் சீர்திருத்த விவாதங்களில் முக்கிய பங்கு வகித்தார். நிலையான வரி விலக்கினை அதிகரிப்பதன் மூலமும், புதிய தனிநபர் வருமான வரி அடுக்குகளை மறுசீரமைப்பதன் மூலமும் வருமான வரியினை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான ஆலோசனைகளை டெப்ராய் அளித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டில், டெப்ராய் தலைமையிலான குழு இந்திய ரயில்வே பல்வேறு சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தது, அதில் ஒன்று தன்னிச்சையான ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தல் மற்றும் வருவாய் அடிப்படையிலான கணக்கியலைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். வேளாண்மையில் குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு மேல் வரி விதிப்பது அவசியம் என்றும் இதனால் இந்தியாவின் வரி தளத்தை விரிவுபடுத்தப்பட்டு வருமான ஏற்றத்தாழ்வுகளைப் போக்க உதவும் என்று டெப்ராய் வாதிட்டார்.
இந்த முன்மொழிவானது இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பினை அளிக்கும் வேளாண் துறையானது அதன் வரிவிதிப்பு கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான உரையாடலைத் தூண்டியது, இருப்பினும் இது அரசியல் ரீதியாக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலையுள்ளது. டெப்ராய் ஆதரித்த மற்றொரு சீர்திருத்தம் ஒற்றை-விகித பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையாகும். இந்தியாவின் ஜிஎஸ்டி 2017இல் பல வரி அடுக்குகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், நெறிப்படுத்தப்பட்ட, ஒற்றை-விகித அமைப்பு செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் இணக்கச் சுமைகளைக் குறைக்கும் என்று அவர் வாதிட்டார்.
ஆதாரம்: www.jagranjosh.com ; www.frontlinethehindu.com ; www.livemint.com ; www.skoch.in ; www.thehindubusinessline.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
