ஜான் பேட்ஸ் கிளார்க் (John Bates Clark) ஜனவரி 26, 1847இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். இறுதி நிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை வழங்கியவர் என்ற வகையில் புகழ்பெற்றவர் ஆவார். அதில் அவர் உற்பத்தி காரணிகளான உழைப்பு, மூலதனம், நிலம் ஆகியவற்றின் உரிமையாளர்களிடையே தேசிய உற்பத்தியில் இருந்து வருமானம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதைக் கணக்கிட்டார். கிளார்க்கின் முதல் புத்தகமான The Philosophy of Wealth என்பதை 1885இல் வெளியிட்டார், இதில் அமெரிக்கச் சொத்து கோட்பாட்டைச் சீர்திருத்தும் முயற்சியினை வெளிப்படுத்தியிருந்தார். அவர் செல்வம் என்பது ஒரு இயற்கையின் தேற்றம் அல்ல, மாறாக இது ஒரு அரசியல் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். தனியார் சொத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் இல்லையென்றால், சொத்துக்கு “மதிப்பு” இருக்காது, இதனால் “செல்வம்” என்பதும் இருக்காது என்கிறார் கிளார்க்.
The Distribution of Wealth (1899) என்ற புத்தகத்தின் வழியாக கிளார்க் புகழ்பெற்ற பயன்பாட்டுக் கோட்பாட்டை (Utility Therory) வழங்கியுள்ளார். பொருட்கள் ஒவ்வொன்றும் தனக்கான “பயன்பாடுக் குவியல்களை” கொண்டிருப்பதாக அவர் நம்பினார்; அப் பயன்பாடானது பொருட்களுக்குள் வேறுபட்டதாக இடுக்கும் என்றார். இந்த அடிப்படையில் இறுதி நிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை வடிவமைத்தார் (பல்வேறு உற்பத்திக் காரணிகளுக்கு, எவ்வாறு விலைகளை நிர்ணயிப்பது என்பது பற்றியது).
கிளார்க் தொடக்கத்தில் மூலதனக் கோட்பாட்டை வழங்கியிருந்தார். கிளார்க் மூலதனத்திற்கும் மூலதனப் பொருட்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். மூலதனம் முற்றிலும் இயங்கக் கூடியது, ஆனால் மூலதனப் பொருட்கள் அப்படியானது இல்லை. ஒரு தொழிலில் இருந்து ஒரு மில்லியன் டாலர்களைப் பிரித்தெடுத்து மற்றொரு தொழிலில் முதலீடு செய்வது சாத்தியமாகும். சாதகமான சூழ்நிலையில், வீணாக்காமல் இதைச் செய்ய முடியும் என்கிறார்.
இயற்கை முற்றுரிமையில் விலைகளை ஒழுங்குபடுத்துவது அவசியம் என கிளார்க் குறிப்பிடுகிறார், சந்தை பொருளாதாரம் மிகப் பெரியவை இதில் ஒரு உற்பத்தியாளர் வேறு பல உற்பத்தியாளர்கள் செய்யும் உற்பத்திச் சராசரி செலவைவிட ஒப்பீட்டு அளவில் குறைவான செலவில் உற்பத்தி செய்ய இயலும். ஒரு கற்பனையான “நிலையான நிலை” (Static state) நிறைவுப் போட்டி சமநிலையின் ஒரு மாதிரியை உருவாக்கினார், அதைத் தொடர்ந்து அனுமான அடிப்படையில் இயக்க மாற்றங்களின் பொதுவான விளைவினைப் பற்றி ஆயவிட்டார்
கிளார்க் Essentilas of Economic Theory (பொருளாதாரக் கோட்பாட்டின் அத்தியாவசியங்கள்) 1907இல் வெளியிட்ட புத்தகத்தில், பொருளாதார ரீதியாக வளர்ந்த பகுதிகளில் காரணிகள் இடம்பெயறக்கூடியதாவும் சந்தை சக்திகள் செயல்படுவதாக இருப்பதை அடிப்படையாகக்கொண்டு பொருளாதார விதிகளைத் தனது ஆய்விற்காகப் பயன்படுத்தினார். வளர்ந்த மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளுக்கு இடையிலான உலகளாவிய சமநிலையை அவர் நீண்ட காலமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது எனக் கருதினார். ஒரு நிலையான விளைவு தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பெரிதும் சார்ந்திருக்கும் என்றார். 1935இல் A Tender of Peace (அமைதிக்கான ஒப்பந்தம்) என்ற புத்தகத்தை வெளியிட்டார், அதில் அமைதியை நடைமுறைப்படுத்த போதுமான அதிகாரமும் தீர்மானமும் கொண்ட லீக் ஆஃப் நேஷன்ஸுக்கான ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். கிளார்க் மார்ச் 21, 1938இல் மறைந்தார்.
ஆதாரம்: www.britannica.com ; www.econlib.org ; www.hetwebsite.net ; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
