கிளார்க் வார்பர்டன் (Clark Warburton) ஜனவரி 27, 1896இல் பிறந்து செப்டம்பர் 18, 1979இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். வார்பர்டன் 1942ஆம் ஆண்டு வணிக சுழற்சி அனுமானத்தை வடிவமைத்தார், பணத்தின் அளிப்பில் சிறிய அளவில் குறையும்போது அதன் சுழற்சியானது சுருக்கமடைகிறது இதனால் அதிக மந்தநிலை உருவாக்கும் திறன் கொண்ட முக்கியக் காரணியாகப் பணம் விளங்குகிறது என்று விளக்கினார். ஆனால், 1945வாக்கில் தரவுகளின் அடிப்படையின் ஆய்வின்படி, வணிக மந்தநிலைகளுக்கு முக்கிய மூலக் காரணியாக ஒழுங்கற்ற பண அளிப்பு இருப்பதையும், ஆனால் கடுமையான மந்தநிலையின் போது பணம் மட்டுமே முக்கிய காரணியாக இருப்பது இல்லை என்றும் வேறு பிற காரணிகளின் தாக்கமும் உள்ளது என்று விளக்கியுள்ளார்.
தரவுகளின் மதிப்பின் வழியாக பண அளவு கோட்பாட்டினை வார்பர்டன் உருவாக்கினார். அவர் தனது கோட்பாட்டில் நீண்ட காலச் சமநிலைக்கும் குறுகிய கால சமநிலையின்மை இடையே வேறுபடுத்தி விளக்கியுள்ளார். தரவுகளின் அடிப்படையில் அளவிட நீண்ட காலத்தில் பண அளவானது விலை மட்டத்தின் மீதான விளைவுகள், குறுகிய காலத்தில் பணத்தின் ஒட்டுமொத்த செலவினங்களின் மீதான விளைவினை கணக்கிட வார்பர்டன் ஃபிஷரின் சமன்பாட்டினையே MtRt = PtQt பயன்படுத்தினார்.
பெருமந்தம் உருவாவதற்குக் காரணம், ஆண்டு பணவியல் வளர்ச்சியற்ற நிலையானது, நிலையான விலையில் முழு வேலைவாய்ப்பானது தகுந்த அளவிற்குத் தொடர் சமநிலையில் இருப்பதினால் என்கிறார். நிலையான விலையில் தொடர்ச்சியான முழு வேலைவாய்ப்புக்குத் தேவையான வருடாந்திர பண வளர்ச்சியின் தோல்வியை வார்பர்டன் விளக்கினார். கீன்ஸின் கோட்பாட்டிற்கும் தொன்மை பொருளாதார கோட்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தரவுகளின் அடிப்படையில் விமர்சனம் செய்துள்ளார். அதன்படி (1) நீர்ம விருப்பம் (2) பற்றாக்குறை செலவினக் கோட்பாடு ஆகியவற்றில் மீது அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
வார்பர்டன், டோபினின் பணக் கோட்பாட்டில் செயலற்ற வைப்புத் தொகைக்கான வட்டி நெகிழ்ச்சியானது தேவைவைப்பிற்கும் வங்கியின் பற்றுக்கான விகிதத்தின் வழியாகத் தருவிக்கப்படுகின்றது என்ற விமர்சனத்தை முன்வைத்தார். வங்கியின் பற்றானது சொத்துக்கான செலுத்தல் மற்றும் பிற தொழில்நுட்ப பரிவர்த்தனையைப் பெருமளவில் பிரதிபலிக்கும் என்றார். பணத்தின் வரையறையில் கால வைப்புத்தொகை சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
நிதி கொள்கை என்பது பண நிதியளிக்கப்படாமல் இருக்கும் நிலை என்ற கருத்தினை முன்வைத்தார். அரசின் செலவினத்திற்கு வரிவிதிப்பு, வங்கிகள் தவிற்று தனியார்த் துறையிலிருந்து கடன் பெறுதல் போன்றவை வழியாக நிதி பெறப்படுகிறது என்றார். இது குறுகிய காலத்தில் பணத்தின் சுழற்சியைப் பாதிக்கும் என்றார். இருப்பினும், வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதன் மூலம் நிதி பெறப்பட்டு அரசாங்கச் செலவினமாது பண விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது செலவினங்களை நேரடியாகப் பாதிக்கிறது.
பண சீர்திருத்தத்திற்கான பல் வேறு முன்மொழிவினை வார்பர்டன் எடுத்துரைத்தார், அவை (1) பண வளர்ச்சி விதியை செயல்படுத்துதல், (2) கூட்டாட்சியரசின் நிதி காப்பு முறையத்தை (Federal reserve System) மறுசீரமைத்தல், (3) வங்கி மேற்பார்வையை மேம்படுத்துதல், (4) பண மற்றும் நிதிக் கொள்கையை ஒருங்கிணைத்தல், (5) கூட்டாட்சியரசின் நிதி காப்பு முறையாத்தில் உறுப்பினர் அல்லாத வங்கிகளைச் சேர்த்தல், (6) தேவை வைப்புத்தொகை மீதான வட்டி செலுத்துதலுக்கான தடையைப் பராமரித்தல்; மற்றும் (7) பன்னாட்டு பணவியல் சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு ஆதரவாக அவர் வாதிட்டார்.
ஆதாரம்: www.hetwebsite.net ; www.nber.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

