நைலா கபீர் (Nail Kabeer) ஜனவரி 28, 1950இல் இந்தியாவில் பிறந்த பிரித்தானிய- வங்காளதேச சமூகப் பொருளாதார அறிஞர் ஆவார். லண்டன் பொருளாதார பள்ளியில் பேராசிரியராக பணிபுரிந்ததுள்ளார். பாலினம், வறுமை, தொழிலாளர் சந்தை, வாழ்வாதாரங்கள், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் சந்தைகளின் பாலின ஈடுபாடுகள் ஆகியவை கபீரின் தொடர்புடைய ஆய்வு பகுதிகளாகும்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அவரது முக்கிய ஆராய்ச்சி களங்களாக இருந்தன. அவரது முந்தைய படைப்பாக Reserved Realities: Gender Hierarchies in Development Thought 1994இல் வெளியிடப்பட்டது; அன்மையில் Renegotiating Patriarchy: Gender, Agency and the Bangladesh Paradox என்ற புத்தகம் லண்டன் பொருளாதாரப் பள்ளியின் (LSE) பதிப்பகத்தினால் 2024இல் வெளியிடப்பட்டது. அவர் பன்னாட்டு நிறுவனங்கள் (உலக வங்கி, ADB, UNDP, UN), இருதரப்பு நிறுவனங்கள் (DFID, SIDA, CIDA, IDRC) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (Oxfam, Action Aid, BRAC, PRADAN, Nijera Kori) ஆகியவற்றில் ஆலோசனைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டுள்ளார்.
பாலின சமத்துவமின்மை என்பது பகுதி அளவில் பல்வேறு நாடுகளின் சமூக விதிமுறைகள் மற்றும் பின்பற்றலின் விளைவாகும். இருப்பினும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளால் பெரும்பாலும் ஈடுபடும் ஊதியம் பெறாத வீட்டு வேலைகள் மற்றும் இனப்பெருக்க செயல்களை அவை பிரதிபலிக்கின்றன. பொருளாதாரத்திலும் பொது வாழ்க்கையிலும் அவர்கள் பங்கேற்க இயலாததற்கு இது ஒரு பெரிய மூல காரணமாக உள்ளது.
பாலின சமத்துவமின்மை வேறு எந்த வகையான சமத்துவமின்மையையும் விட அதிகமாகப் பரவியுள்ளது, இது நாடுகள், வர்க்கம் மற்றும் சமூகக் குழுக்களுக்கு இடையில் பரவியுள்ளது, இருப்பினும் இது மிகவும் இயற்கையானது என்பதால் இது அடிக்கடி கவனிக்கப்படுவதில்லை. பெண்ணியம் என்பதைப் பற்றிக் குறிப்பிடும்போது கபீர், வாய்ப்புகள், விளைவுகள் சமத்துவமாக இருக்கவேண்டும், இதனைத்தான் பின்பற்றவேண்டும் என்று வடிவமைத்து தரக்கூடாது அதற்குப் பதில் விரும்பும் வாழ்வினை தேர்வு செய்வதற்கான உரிமையுடையதாக இருக்கவேண்டும் என்கிறார்.
ஆதாரம்: www.lse.ac.uk ; www.blogs.worldbank.org ; www.ids.ac.uk ; www.robertboschacademy.de
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

