அருணவ சென் (Arunava Sen), ஜனவரி 3 , 1959இல் பிறந்தார். புது தில்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரம் மற்றும் திட்டமிடலில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். ஆட்டக் கோட்பாடு, சமூகத் தேர்வுக் கோட்பாடு, இயந்திர வடிவமைப்பு, வாக்களிப்பு, ஏலங்கள் போன்றவற்றில் இவருடைய படைப்புகள் காணப்படுகின்றது. சென், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இதழ்களில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரக் கோட்பாட்டாளராக இவர் திகழ்கின்றார்.
சென்னின் ஆராய்ச்சியானது உலக பொருளாதாரக் கொள்கையினை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இவருடைய கொள்கைகள் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சென்னின் ஆய்வுடன் தொடர்புடைய பங்களிப்பினை அளித்ததற்காக 2007 ஆம் ஆண்டில் லியோனிட் ஹர்விச், எரிக் மாஸ்கின் ரோஜர் மியர்சன் ஆகியோர் நோபல் பரிசினைப் பெற்றுள்ளனர்.
தன்னுடைய பொருளாதார ஆய்வின் அடிப்படையான அம்சமாக சமூக தேர்வு கோட்பாட்பாடாகும். கென்னத் ஆரோவின் ஆய்வுகளும், அமர்த்தியா சென்னின் பங்களிப்புகள் இவருடைய ஆய்வுகளில் பிரதிபளிகின்றது. சென்னின் ஆய்வானது அடிப்படையில் நிறுவனம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப் பற்றிய ஆயவிடுகின்றது. விரும்பப்படும் முடிவுகளை அடைய உத்தியினை நிறுவனங்கள் கீழ் மக்கள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றனர், செயல்படுத்தப்படுகின்றனர் என்கின்ற ஆய்வு முக்கியமானதாகும். வாக்களிப்பு முறைகள் வடிவமைப்பு, ஏலங்கள், பொதுச் சேவைகளை வழங்குவதற்கான அமைப்புகளின் போன்றவற்றில் சென்னின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னின் ஆய்வானது வேறுபட்ட வடிவமைக்கப்பட்ட நிறுவனங்கள் மக்களை வெவ்வேறு உத்திகளை ஏற்றுக்கொள்ளத் தூண்டுவதையும், கோட்பாடுகள் உருவாக்கமானது மக்களின் திரட்சியான உத்திகளின் நடவடிக்கைகள் பற்றி விளக்குகின்றது. சென்னின் புகழ்பெற்ற ஆய்வானது தனித்துவமான ”இயந்திர வடிவமைப்பு” பற்றியதாகும். இது 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல், பொருளாதார ஆய்விற்கு உருவாக்கப்பட்டதாகும். இது தனிநபர்கள் வர்த்தகமானது திறன், நியாயத்தன்மை, ஊக்கத்தொகைகளுக்கு இடையில் ஏற்படும் சமரசரங்களைப் பற்றி ஆயவிடுகின்றது. மானுட அரசியல், பொருளாதார போக்கு போன்றவற்றில் புதுமையான ஆராய்ச்சிக்காக அருணவ சென்னிற்கு சமூக அறிவியலுக்கான இன்ஃபோசிஸ் பரிசையும், பொருளாதார அறிவியலுக்கான TWAS-Siwei Cheng பரிசையும் பெற்றுள்ளார்.
ஆதாரம்: www.infosysprize.org ; www.twas.org
📚 எழுதியவர்:

******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் சென்னை புத்தக காட்சியை நேரடியாக வந்து பார்வையிட்டு அதில் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்த நூல் அறிமுக கட்டுரையை ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை www.bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நல்ல முயற்சி. இருப்பினும், இவர் ஆட்டக் கோட்பாடு ஏலங்கள் பற்றிய படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்கையில் என்னைப் போன்றவர்களுக்கு சற்றே தலை சுற்றாது இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. எனவே இக்கோட்பாடுகளை பொருத்திப் பார்க்கையில்தான் இவரை நாங்கள் புரிந்து கொள்ளமுடியும். எனவே வெறுமனே சொல்லிச் செல்லாமல் ஓரிரு வரிகளில் அவற்றை விவரணம் செய்வது அறிமுகத்தை இன்னும் மேம்படுத்துவதோடு பலரிடமும் சென்று சேரும்
சரியான முயற்சி. இருப்பினும் ஆட்டக் கோட்பாடு, ஏலங்கள் பற்றிய படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்கையில் தலையைச் சுற்றி காட்டில் விட்டாற்போல் இருக்கிறது. சற்றே ஓரிரு வரிகளில் அவற்றை விவரணம் செய்திருந்தால் பொருத்திப் பார்ப்பதோடு அவரது முக்கியத்துவத்தையும் அறிந்திட முடியும். இது இன்னும் பலருக்கு சென்று சேரும்