ஜே.பி. சே (J.B.Say), ஜனவரி 5 , 1767இல் பிறந்து நவம்பர் 15 , 1832இல் மறைந்த பிரெஞ்சு பொருளாதார அறிஞர் ஆவார். சே உலகளவில் அறியப்படுபடும் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். பத்திரிகையாளர் மற்றும் தொழில்முனைவோர் உட்படப் பல பதவிகளை சே வகித்துள்ளார். அளிப்பு அதன் தேவையை உருவாக்குகிறது என்னும் சந்தை விதியினை அறிமுகப்படுத்தியவர் ஆவார். அவரது சந்தை விதி என்பது உற்பத்தியே தேவையின் மூலமாகும் என்ற ஒரு தொன்மைப் பொருளாதார கோட்பாடாகும். சேயின் சந்தை விதியானது, தேவையின் திறன் என்பது வேறு ஒரு பொருளின் அளிப்பு மூலம் நிதி வழங்களைப் பொறுத்ததாகும். அவர் கட்டுப்பாடற்ற சந்தை மற்றும் சர்வாதீனபோட்டியின் ஆதரவாளராகவும், தொழில்முனைவோர் புத்தாக்கம் கோட்பாட்டின் முன்னோடியாகவும், ஆடம் ஸ்மித்தின் கருத்துக்களைப் பொதுவெளியில் கொண்டுசென்றவராகவும் அறியப்படுகின்றார்.

பொருளாதார மந்தநிலைக்குத் தேவையில் உருவாகும் பொதுவான பலவீனம் அல்ல, மாறாக சில சந்தைகளில் ஏற்படும் தற்காலிக மிகை உற்பத்தி மற்றும் பிறவற்றில் காணப்படும் குறைவான உற்பத்தியே காரணம் என்று சே கூறினார். எந்த ஒரு சமனற்ற நிலையும் தானாகவே சரிசெய்யப்படும், ஏனெனில் மிகையாக உற்பத்தி செய்பவர்கள் நுகர்வோரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ப உற்பத்தியினை மாற்றியமைப்பார்கள் அல்லது வணிகத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்தம் செய்யும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டார். சேயின் சந்தை விதியின்படி குறுகியகாலத்தில் மிகை உற்பத்தி இருக்க இயலாது என்கிறது. ஒரு பொருளின் மதிப்பானது அதன் உற்பத்திக்காக ஈடுபடுத்தப்படும் உழைப்பினால் உருவாகாது ஆனால் அதன் நுகர்வோர் பயன்பாட்டின் வழியாக ஏற்படுகின்றது என்று குறிப்பிட்ட பொருளியல் அறிஞர்களில் ஒருவராக்க சே கருதப்படுகின்றார்.
ஜே.பி.சே தொழில் முனைவோர் கோட்பாட்டினை வழங்கியவர் ஆவார். அறிவாற்றலை உருவாக்கும் விஞ்ஞானிக்கும் தொழில்துறை செயல்பாட்டில் அதைப் பயன்படுத்தும் தொழிலாளிக்கும் இடையில் தொழில்முனைவோர் ஒரு இடைத்தரகராகச் செயல்படுகிறார். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜே.எம். கீன்ஸ், சேயின் கோட்பாட்டினை திறனாய்வுடன் விமர்சித்தார். கீன்ஸின் கூற்றுப்படி, தனிநபர்கள் தங்களிடம் உள்ள அனைத்து பணத்தையும் செலவிடுவதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஊக அல்லது சேமிப்பு நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். கீன்ஸ், மிகை உற்பத்தியானது பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகளை உருவாக்கத்திற்கான காரணமாகும். ஒரு பொருளின் உற்பத்தியானது எப்போதும் அதன் விற்பனைக்கு வழிவகுக்காது. உற்பத்தியான பொருட்கள் விற்கப்படாததால் பொருட்களின் இருப்பு அதிகரிக்கக்கூடும், இது தொழிலாளர் வேலை இழப்பு மற்றும் வணிக தோல்விகளுக்கு வழிவகுக்கும். இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில், தொழில்முனைவோர் கவலைப்படுகிறார்கள், மேலும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைகிறது. நெருக்கடி தொடர்ந்து நெருக்கடியை மூட்டும், இதனை அரசு தலையீட்டினால் மட்டுமே தடுத்து நிறுத்தமுடியும் என்கிறார் கீன்ஸ்.
ஆதாரம்: www.britannica.com ; www.hetwebsite.net ; www.econlib.org ; www.says.univ-littoral.fr
******************************************************************************
ரிச்சர்ட் ஆண்ட்ரியாஸ் வெர்னர் (Richard Andreas Werner), ஜனவரி 5 , 1967இல் பிறந்த வங்கி மற்றும் மேம்பாட்டுப் பொருளாதார அறிஞர் ஆவார். இவர் ஒரு பணவியல் மற்றும் மேம்பாட்டுப் பொருளாதார நிபுணராக அறியப்படுகிறார். வெர்னர், பரும தளர்வு என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார், கடன் உருவாக்கத்தில் விரிவாக்கமாக உண்மையான பரும தளர்வைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கும் «QE2» என்பதை முன்மொழிந்தார்.

1992ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரங்களுக்கான நிறுவனத்தில் ஐரோப்பிய ஆணைய உறுப்பினராக இருந்தபோது, ரிச்சர்ட் தனது ‘கடன் அளவு கோட்பாடு’ மூலம் கடன் பிரித்தல் மற்றும் சொத்து சந்தைகள் மற்றும் வளர்ச்சியில் அதன் தாக்கத்தை முன்மொழிந்தார். 1995 ஆம் ஆண்டில், ஜப்பானில் ‘பரும தளர்வு’ என்ற கருத்தை அவர் முன்வைத்தார் (கடன் உருவாக்கத்தில் விரிவாக்கம் என வரையறுக்கப்படுகிறது). அவரது ‘பிரின்ஸ் ஆஃப் தி யென்’ புத்தகம் ஜப்பானில் அதிகமாக விற்பனையானது, ஆறு வாரங்களுக்கு ஹாரி பாட்டர் புத்தகத்தை இப் புத்தகம் விற்பனையில் முந்தியது.
அதன் 2003 ஆங்கிலப் பதிப்பில், ஐரோப்பியப் பகுதியில் கடன் குமிழ்கள் மற்றும் வங்கி நெருக்கடிகளை உருவாக்குவது குறித்து அவர் எச்சரித்தார். 2005ஆம் ஆண்டு அவரது ‘நியூ பாரடைம் இன் மேக்ரோ எகனாமிக்ஸ்’ (பால்கிரேவ் மேக்மில்லன்) புத்தகமும் அவ்வாறே அதிக அளவில் விற்பனையானது. 2014ஆம் ஆண்டில், வங்கிகள் கடன்களை வழங்கும்போது பணத்தை உருவாக்குகின்றன என்பதற்கான முதலில் ஆதார அடிப்படையில் வெளியிட்டார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றம், 2003 ஆம் ஆண்டில் அவரை “நாளைய உலகத் தலைவராக” தேர்ந்தெடுத்தது.
ஆதாரம்: www.professorwerner.org ; www.socioeco.org
📚 எழுதியவர்:

******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

