கௌசிக் பாசு (Kaushik Basu), ஜனவரி 9, 1952இல் பிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். 2009 முதல் 2012 வரை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2012 முதல் 2016 வரை உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராகவும் பணியாற்றினார். மேம்பாட்டுப் பொருளாதாரம், நலவியல் பொருளாதாரம், தொழில்துறை அமைப்பு மற்றும் ஆட்டக் கோட்பாடு ஆகியவை பாசுவின் முக்கிய பங்களிப்புகளாகும்.
உலக வங்கியின் மாறிவரும் நோக்கம் மற்றும் உலகத்துடனான அதன் ஈடுபாடு உள்ளிட்ட உலகளாவிய வளர்ச்சி பிரச்சினைகள் குறித்து கௌசிக் பாசு விவாதித்துள்ளார். இந்தியாவின் முக்கிய பிரச்சனைகள், பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதற்குப் பொருளாதார அறிவாற்றலைப் பயன்படுத்துதல், பொதுச் சேவைகள் வழங்குதலின் மதிப்புறு பங்கினைப் பற்றி பாசு தனது பொருளாதார ஆய்வுகளில் விவாதித்துள்ளார்.
பாசு டெல்லி பொருளாதாரப் பள்ளி, ஹார்வர்ட், பிரின்ஸ்டன் மற்றும் எம்ஐடியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். 1992ஆம் ஆண்டில், அவர் மேம்பாட்டுப் பொருளாதார மையத்தை நிறுவி அதன் முதல் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளார்.
ஆடம் ஸ்மித்தின் “கண்ணுக்குத் தெரியாத கை” என்ற கருத்தின் வரம்புகளைப் பாசு ஆராய்ந்து, சுயவிருப்பம் பொருளாதார நடவடிக்கைகளை இயக்க முடியும் என்றாலும், அது உகந்த விளைவுகளையோ அல்லது சமூக நல்வாழ்வையோ உத்தரவாதம் செய்யாது என்று வாதிடுகிறார். கண்ணுக்குத் தெரியாத கை திறனுடன் செயல்பட நேர்மை மற்றும் நியாயம் போன்ற தார்மீக குணங்கள் மிக முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
சமூக ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் சொந்தம் என்ற உணர்வை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிக்கிறார். அனைத்து தரப்பினரும் தங்களை உள்ளடக்கியதாகவும், மதிக்கப்படுவதாகவும் உணரும் ஒரு சமூகத்தை ஊக்குவிக்கும் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் வேண்டும் என்று பாசு குறிப்பிடுகிறார்
ஆதாரம்: www.blogs.worldbank.org; www.ideasforindia.in/profile/kaushik; www.voxdev.org; www.brookings.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

