ஜெயஸ்ரீ பாலாஜியின் *ஈரம்* கவிதை..

Jayasree Balaji's Wet (Eeram) Poetry in Tamil. Book Day (Website) and Bharathi Tv (Youtube) are Branches of Bharathi Puthakalayam.ஈரம்

சோளம் விதைத்தோம்
சோதனை வந்தது
வேர்க்கடலை வைத்தோம்
வேதனை சேர்ந்தது

கம்பு பயிரிட்டோம்
கடன் பெருகியது
கீரைகள் வளர்த்தோம்
பயம் பற்றிக் கொண்டது

உளுந்து விதைத்தோம்
உளைச்சல் தந்தது
கோதுமை விளைகையில்
கோரப்பசி தாண்டவமாடியது

இதுவும் கடந்து போம்
என்றே கடக்க தெம்பு இல்லை
நிலம் மட்டுமல்ல
வயிறும் தான் வறண்டுவிட்டது

இவை வெறும் வரிகள் அல்ல
உழும் குடும்பத்தின் வலிகள்
வறுமை பெருத்து உடல் சிறுத்து
மனம் வருந்தி அழும் வரிகள்

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடி நின்று பயனில்லை
ஆயிரம் இதயங்கள் காய்ந்து கிடக்கின்றன
எழுந்து வந்து கரங்களை நீட்டுவோம்

வீட்டில் உலை கொதிக்கும் போதெல்லாம்
அங்கே
உயிர்கள் கொதிக்கின்றன
சோற்றுக்கு கை நனைத்திடும் போது
மனதையும் சற்று நனைத்துக் கொள்வோம்

நன்றிடன்
ஜெயஸ்ரீஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.