இருப்பது ஒரு மனம்..!! – ஜெயஸ்ரீஇருப்பது ஒரு மனம்..!!

ஒரு உடல்
ஓராயிரம் எண்ணங்கள்
நல்லன பல தீயன சில
அவை செயல்களாவது நம் வசம்
இருப்பது ஒரு மனம்..

நல்லோர் ஒரு புறம்
தீயோர் ஒரு புறம்
இவ்விருவரும் ஓரே புறம்
எரிகாட்டில் அக்கினி வசம்
இருப்பது ஒரு மனம்..

தீயவை தேடல் சிற்றின்பம்
நல்லவை தேடல் பேரின்பம்
தீயவையும் நல்லன போர்வையில்
யாவும் மாய வசம்
இருப்பது ஒரு மனம்..

வான் மண் கடல் போல
மனதின் குணம் அவை போல
வானாக பரந்து கடலாக விரிந்து
மண் போல நிலைத்திருப்போம்
இருப்பது ஒரு மனம்..

நன்றி

ஜெயஸ்ரீ