என் இரவு நண்பன்
மின்சார கண்கள்
அடர்ந்த மீசை
துடுக்கான காதுகள்
கம்பீர நடை
மாசற்ற நிறம்
கொஞ்ச தூண்டும் அழகு
எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பான்
சில சமயங்கள் சில்மிஷங்கள் செய்வான்
பல சமயங்களில் அமைதியாய் இருப்பான்
வறுத்த மீனும் கருவாட்டுக் குழம்பும் பிரியம்
குறையேதும் சொல்ல மாட்டான்
நேற்றும் வந்தான்
அருகில் வந்தான்
மிக அருகில்
அவன் சுவாசத்தை உணர்ந்தேன்
என் பார்வை அவன் மீது
அவன் பார்வை என் மீது
விழியில் விழி மோதி இதயம் சருகானது
மெல்ல அடி வைத்து நெருங்கினேன்
தொட்ட விடத்தான் ஆசை
“மியாவ்” என்று ஓடிவிட்டான்
நன்றி
ஜெயஸ்ரீ
பூனை நண்பரின் கவிதை சிறப்பு தோழர். வாழ்த்துகள் தோழர்
கடைசி வரியை படித்துவிட்டு மீண்டும் கவிதையைப் படிக்கும் தூண்டிய கவிதை அருமை