‘ ம் ‘
ம்…
அடுக்கடுக்கான ஆணையின்
பிறப்பில் சிக்கித்
தவிக்கும் மனக்
கூப்பாட்டின் வெளித்தோன்றல்
வார்த்தைப் போரின்
தேடு பொருளில்
சமாதானத் தூது
காதலில் மகிழ்ந்துணரும்
தருணத்திற்கு அகம்
உரைக்கும் ஓவியம்
இலக்கண விதிக்குட்படாத
அகர முதலியில்
நிகர் பொருளில்லாத
யாதுமாகிப் போனவளின்
எல்லாமுமான மனக் களிப்பு
அனைவர் பேசும்
வீட்டு முற்றத்தின்
கதைப்பின் மறுமொழி
ம் …
கவிஞர் செ. ஜீவலதா
ஊர்: இராஜபாளையம்
அலைபேசி எண்: 9791209979