படுக்கை அறை கதவின்
பின் பகுதியில்
அந்த சின்னப்பல்லி
என்னைப் போல
சிந்தித்து ஸ்தம்பித்து
நிற்கிறது வாலை ஆட்டுகிறது
குழம்பு வைக்க
கொண்டை கடலை
ஊற வைத்தோமா?
நாளை மழை இருக்குமா?
குதிக்கால் வலிக்கிறதே
நாளை வியாழக் கிழமை
இப்படியாக நள்ளிரவு
2:30 வரை தூக்கத்தை
கட்டமைக்க போராட்டத்தின்
சிறிய இடைவெளியில்
ஒரு கவிதை முயன்று விட்டு
தூங்கிப்போனேன்

