மஃபியோ பான்டலியோனி (Maffeo Pantaleoni) ஜூலை 2, 1857இல் பிறந்து அக்டோபர் 29, 1924இல் மறைந்த இத்தாலியப் பொருளாதார அறிஞர் ஆவார். பான்டலியோனி இறுதிநிலைப் பயன்பாட்டுக் கோட்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளார் இத்துடன் புள்ளிவிவரங்கள் மற்றும் நிதித்துறையிலும் அவர் குறிப்பிடத்தக்க வழங்கலைச் செய்துள்ளார்.
பான்டலியோனியின் மதிப்புக் கோட்பாடு என்பது செல்வத்தின் கொடுக்கப்பட்ட கூறுகளின் பரிமாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஒவ்வொரு கூறுகளின் இறுதி பயன்பாட்டின் அளவிலும் வேறுபாடுகள் இருப்பதால், இந்தக் கூறுகள் பரிமாற்றத்தின் இலக்கு என்று அவர் உறுதிப்படுத்தினார். பயன்பாட்டின் நிகழ்வைக் கருத்தில் கொண்டு, பான்டலியோனி இறுதிநிலைப் பயன்பாட்டுக் கோட்பாட்டாளர்களின் பகுப்பாய்வுகளுடன் தொடங்கினார், குறிப்பாக, கோசென் மற்றும் ஜெவோன்ஸின் பகுப்பாய்வுகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆனால் அவர்களின் பகுப்பாய்வுகள் அவரை திருப்திப்படுத்தவில்லை, எனவே அவர் அவற்றை ரிக்கார்டோ மற்றும் ஃபெராராவின் தொன்மைப் பகுப்பாய்வுகளுடன் இணைக்க முயன்றார். ஒரு தத்துவார்த்த பொருளாதார நிபுணராக பான்டலியோனியின் பணி நிதி சிக்கல்கள் குறித்த அவரது பகுப்பாய்வில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரிக்கார்டோவை அவர் அடிக்கடி விமர்சித்த போதிலும், அவர் பெரும்பாலும் நிதித்துறையில் ஒரு ரிக்கார்டியராக இருந்தார், பரிமாற்றம் மற்றும் வரிகள் மற்றும் பொதுக் கடன் நிகழ்வுகள் பற்றிய அவரது ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: www.taylorfrancis.com; www.eh.net/book_reviews
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

