ஜெசிகா கார்டன் நெம்பார்டின் வண்ண பென்சில் ஓவிய பாணி உருவப்படம், கீழே அவரது பெயர் இடம்பெற்ற பேனர் மற்றும் இடப்புற வட்டச்சட்டத்தில் எழுத்தாளர் முனைவர் பு. அன்பழகனின் உருவப்படத்துடன் கூடிய சிறப்புப் படம்.

ஜூலை 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜெசிகா கார்டன் நெம்பார்ட் – முனைவர் பு. அன்பழகன்

ஜெசிகா கார்டன் நெம்பார்ட் (Jessica Gordon Nembhard) ஜூலை 3, 1956இல் பிறந்த அமெரிக்க அரசியல் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் தற்போது நியூயார்க் நகரப் பல்கலைக்கழகத்தின் யான் ஜே கல்லூரியில் ஆப்பிரிக்கா ஆய்வுகள் துறையில் சமூக நீதி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான பேராசிரியராக பணியாற்றுகிறார். கோர்டன் நெம்பார்ட் சமூக பொருளாதாரம், கறுப்பின அரசியல் பொருளாதாரம் மற்றும் பரவலான பொருளாதார கல்வியறிவு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

அவரது ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் கூட்டுறவு பொருளாதார மேம்பாடு மற்றும் தொழிலாளர் உரிமை, சமூக பொருளாதார மேம்பாடு, செல்வ சமத்துவமின்மை மற்றும் சமூக அடிப்படையிலான சொத்துக் கட்டமைத்தல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் மற்றும் மாற்றுத் தீர்வுகள் மற்றும் நீதிக்கான சமூக அடிப்படையிலான அணுகுமுறைகளை ஆராய்கின்றன.

சமூக பொருளாதார மேம்பாடு, தொழிலாளர் உரிமை, இனம் சார் செல்வ சமத்துவமின்மை, சமூக அடிப்படையிலான சொத்து மேம்பாடு மற்றும் சமூகங்கள், குறிப்பாக BIPOC சமூகங்கள் ஆகியவற்றில் கூட்டுறவு நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் தாக்கங்கள் குறித்து அவர் ஆய்வுசெய்து வெளியிட்டார். நீதிக்கான சமூக அடிப்படையிலான அணுகுமுறைகளையும் அவர் ஆராய்கிறார். கோர்டன் நெம்பார்ட் 2014இல் Collective Courage: A History of African American Co-operative Economic Thought and Practice, என்ற புகழ்பெற்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இதில், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றில் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன, மேலும் உரிமையியல் உரிமைகள் இயக்கத்தின் மிக முக்கியமான நபர்கள் மற்றும் அமைப்புகள் பல கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியில் நேரடியாக ஈடுபட்டன என்ற குறிப்பிட்டுள்ளார். கோர்டன் நெம்பார்ட் 2014ஆம் ஆண்டு சர்வதேச கருப்பு பெண்கள் காங்கிரஸ் என்ற அமைப்பிடமிருந்து “ONI விருதை” பெற்றவர், மேலும் 2011ஆம் ஆண்டு பணியிட ஜனநாயகத்திற்கான கிழக்கு மாநாட்டிலிருந்து Co-operative Advocacy and Research விருதைப் பெற்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

Gordon Nembhard, Jessica (2014): Collective Courage: A History of African American Cooperative Economic Thought and Practice, State College, PA: Pennsylvania State University Press.

Gordon Nembhard, Jessica (1996): Capital Control, Financial Regulation, and Industrial Policy in South Korea and Brazil, Westport, CT: Praeger Publisher.

ஆதாரம்

www.ineteconomics.org; www.opencuny.org; www.exploring-economics.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *