ஜூலை 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் அலெக்சாண்டர் மிர்லீஸ் (Economist James Alexander Mirrlees Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் அலெக்சாண்டர் மிர்லீஸ் – முனைவர் பு. அன்பழகன்

ஜேம்ஸ் அலெக்சாண்டர் மிர்லீஸ் (James Alexander Mirrlees) ஜூலை 5, 1936இல் பிறந்து ஆகஸ்ட் 29, 2018இல் மறைந்த பிரித்தானிய நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். சமச்சீரற்ற தகவல் சூழலில் குறித்த பொருளாதாரக் கோட்பாட்டினை வழங்கியதற்காக மிர்லீஸ், விக்ரியுடன் சேர்ந்து 1996ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டனர். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

வரிவிதிப்பால் உள்ள சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்க்கமான கணித வழிமுறையை மிர்லீஸின் உருவாக்கினார். வரிவிதிப்பு முறையைப் பயன்படுத்தி, மற்ற பயன்பாட்டினை விட அதிக அளவிலான சமத்துவத்தை அடைய மிர்லீஸ் விரும்புகிறார். இதன் பொருள், உயர் வருமானம் பெருபவர்களிடன் கூடுதலாக வரிவிதிப்பு செய்து கணிசமான வருவாயினை பெறுவது என்பதாகும், இதனை அதிக அளவிலான இறுதிநிலை வரி விகிதம் என்று குறிப்பிட்டார். இதனை “தட்டையான வரி” அல்லது “தட்டையான வரி விகிதம்” என்று குறிப்பிடப்படுகிறது.

அதிக வருமானம் உள்ள நபர் மீதான இறுதி வரி விகிதம் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்பதையும் மிர்லீஸ் நிரூபித்தார். நுகர்வு வரிகள் மீதான மிர்லீஸின் பங்களிப்பானது மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பை உருவாக்கியது. சிறிய பொருளாதாரங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் வரிகளை விதிக்கக்கூடாது என்றும், வரிவிதிப்பு உற்பத்தியில் அல்ல, நுகர்வு மீது இருக்க வேண்டும் என்றும் அவர் கண்டறிந்தார்.

ஆதாரம்

www.nobelprize.org; www.thebritishacademy.ac.uk; www.econometricsociety.org
www.ineteconomics.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *