ஜேம்ஸ் ராபர்ட் மில்லர் (James Robert Millar) ஜூலை 7, 1936இல் பிறந்து நவம்பர் 30, 2008இல் மறைந் அமெரிக்க அரசியல் விஞ்ஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். அவர் சோவியத் பொருளாதாரத்தில் புகழ்பெற்ற நிபுணராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்துக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்த அவரது பகுப்பாய்வானது, பொருளாதாரத் தளத்தில் விவாதங்களுக்கு வழிவகுத்தது.
ராபர்ட் மில்லர் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆர். மில்லர் ஸ்லாவிக் (கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்லாவ் (Slavic) மக்களின் மொழி, வரலாறு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்டது) ஆய்வுத் துறையில் தன் வாழ்நாள் முழுவதும் அறிவார்ந்த ஆய்வுகளை வழங்கியுள்ளார்.
டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மில்லர் பணியாற்றியுள்ளார், கடந்த அரை நூற்றாண்டில் மையப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதாரங்கள், சோவியத் ஒன்றியம் மற்றும் சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்யா பற்றிய ஆய்வில் மிகவும் முக்கிய பல அறிவார்ந்த மற்றும் புலமைமிக்க விவாதங்களில் முன்னணி பங்கேற்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
Millar, James R, (2004): Encyclopaedia of Russian History, New York: Macmillan Reference USA.
Millar, James R. (1987): Politics, Work and Daily Life in the USSR: A Survey of Former Soviet Citizens, Cambridge University Press.
Millar, James R. (1981): The ABCs of Soviet Socialism, Urbana, University of Illionis Press.
Miller James R. and Sharon L, Wolchik (1994): The Social Legacy of Communism. Wasington D.C. < Woodrow Wilson Centre Press.
ஆதாரம்
www.ecgi.global; www.experts.illinois.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

