ஜூலை 09 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஓட்டோ ஸ்டெய்னர் (Economist Peter Otto Steiner Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 09 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஓட்டோ ஸ்டெய்னர் – முனைவர் பு. அன்பழகன்

பீட்டர் ஓட்டோ ஸ்டெய்னர் (Peter Otto Steiner) ஜூலை 9, 1922இல் பிறந்து ஜூன் 26, 2010இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், ஸ்டெய்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருபத்தி மூன்று ஆண்டுகள் முதலில் பொருளாதார பேராசிரியராகவும் பின்னர் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றினார். புகழ்பெற்ற Economic Status of the Aged என்ற புத்தகத்தை ராபர்ட் டோர்ஃப்மேன் என்பவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார்.

டோர்ஃப்மேன்–ஸ்டெய்னர் தேற்றம்

டோர்ஃப்மேன்-ஸ்டெய்னர் தேற்றம் என்பது ஒரு நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய விளம்பரத்தின் உகந்த அளவை தீர்மானிக்க முயலும் ஒரு தொன்மைப் பொருளாதார தேற்றமாகும். நிறுவனங்கள் பொருளின் விலையைக் குறைப்பதன் மூலமோ அல்லது விளம்பரச் செலவை அதிகரிப்பதன் மூலம் நுகர்வோரை அதிகமாக வாங்க வைப்பதன் மூலமோ தங்கள் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று இத்தேற்றம் குறிப்பிடுகிறது.

ஒரு நிறுவனத்திற்கான விளம்பரத்தின் உகந்த நிலை, விளம்பரத்திற்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம் விலை-செலவு விளிம்புடன் விளம்பரம் தொடர்பான தேவையின் நெகிழ்ச்சித்தன்மையை பெருக்குவதற்கு சமமாக இருக்கும் இடத்தில் காணப்படுகிறது. விளம்பரத்திற்கு தேவைப்படும் அளவின் உணர்திறன் அளவு அதிகமாகவும், கூடுதல் உற்பத்தியின் இறுதிநிலை அதிகமாகவும் இருந்தால், விளம்பரத்தின் அளவு அதிகமாகும். ஸ்டெய்னருடைய Economics என்ற பாடபுத்தகம் சுமார் இரண்டு மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.aaup.org; www.obits.mlive.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *