ஃபிரெட்ரிக் ஃப்ரீஹெர் வான் வைசர் (Friedrich Freiherr Von Wieser) ஜூலை 10, 1851இல் பிறந்து ஜூலை 22, 1926இல் மறைந்த வியனாவில் பிறந்த ஆஸ்திரிய பொருளாதாரப் பள்ளியின் தொடக்கக்கால பொருளாதார அறிஞர் ஆவார். வைசர் Imputuation, alternative cost or opportunity cost (மதிப்பீட்டுக் கோட்பாடு மற்றும் வாய்ப்பு செலவு கோட்பாடு) என்ற இரண்டு முக்கியக் கோட்பாடுகளை வழங்கியுள்ளார். மதிப்பீட்டுக் கோட்பாடு என்பது, காரணி விலைகளானது உற்பத்தி விலைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதாகும். வாய்ப்பு செலவு கோட்பாடு என்பது மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.
இக்கோட்பாடானது புதிய தொன்மை பொருளாதாரக் கோட்பாட்டின் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இக் கோட்பாட்டின் கருத்தினை மார்ஷல் மற்றும் பிரித்தானியக் கோட்பாட்டாளர்களால் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய தொன்மைப் பொருளாதாரத்தை, பற்றாக்குறை மற்றும் வள ஒதுக்கீடு பற்றிய ஆய்வை நோக்கி உறுதியாகத் திருப்பிய பெருமை வைசரையே சாரும். இக் கருத்தானது இறுதிநிலை பயன்பாட்டு விதிக்கு அடிப்படையானது, இது நிலையான அளவு வளங்களுக்கும் வரம்பற்ற தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்யும் ஒரு கருத்தாகும்.
வைசர் Natural Value (இயற்கை மதிப்பு) என்ற புத்தகத்தை 1889இல் வெளியிட்டார், இப் புத்தகமானது மாற்றுச் செலவுக் கோட்பாடு மற்றும் மதிப்புக் கோட்பாட்டை விவரிக்கிறது. வைசரின் மற்றொரு புத்தகம் Social Economics (சமூகப் பொருளாதாரம்) என்பதை 1914இல் வெளியிட்டார், இது ஆஸ்திரியக் கோட்பாட்டை முழுவதுமாக விரிவான மறுபரிசீலனை செய்வதின் முயற்சியாகும்.
ஆதாரம்: www.ecaef.org; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

