ஜூலை 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரெட் மான்வில் டெய்லர் (Economist Fred Manville Taylor Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரெட் மான்வில் டெய்லர் – முனைவர் பு. அன்பழகன்

பிரெட் மான்வில் டெய்லர் (Fred Manville Taylor) ஜூலை 11, 1855இல் பிறந்து ஆகஸ்ட் 7, 1932இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார், சந்தை சோசலிசக் கோட்பாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக அவர் மிகவும் பிரபலமானவர். பிரெட் எம். டெய்லர் Say’s Law (சேயின் விதி) என்ற சொல்லாடலை பிரபலமாக உருவாக்கினார், ஜெ.பி.சேயின் சந்தை விதியானது, பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பொருட்களுக்கான நமது தேவையை அதிகரிக்க முடியும் என்ற கருத்தினை, டெய்லர் ஆதரித்தார். சேயின் சந்தை விதி என்ற சொற்றொடர் முதன்முதலில் 1909ஆம் ஆண்டு டெய்லரின் JPE கட்டுரையில் அச்சிடப்பட்டது மற்றும் அவரது பாடப்புத்தகமான Principles of Economics 1911இல் இவ் விதியினை மீண்டும் விளக்கப்பட்டுள்ளது.

பொதுவான தேவைப் பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்பதை டெய்லர் ஒப்புக்கொண்டார். இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுச் செலவுகள் விரிவாக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இந்த நிலைப்பாட்டை சேயும் ஆதரித்தார். 1929இல் டெய்லர் அமெரிக்க பொருளாதார கழகத்தில் உறையாற்றும் போது, ஒரு சோசலிசப் பொருளாதாரம் கோட்பாட்டளவில் வளங்களை திறம்பட ஒதுக்கக்கூடிய நிலைமைகளை கோடிட்டுக் காட்டினார்.

தனியார் நிறுவனப் பொருளாதாரத்தின் நிலைமைகளுக்கு இணையான நிலைமைகள் அரசு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தியை வாங்கத் தேர்ந்தெடுக்கும்போது தங்கள் வருமானத்தைப் பயன்படுத்தும். குடிமக்களுக்கு அரசு பண வருமானத்தை வழங்குவதும், இப் பணத்தைக் கொண்டு பொருட்களை தேர்வு செய்வதும், அரசு உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவார்கள் என்று குறிப்பிட்டார். அரசினால் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு சமமாக இறுதிநிலை செலவும் இருக்கும். இதனால் தொழிலாளர் செலவு உட்பட்ட உற்பத்திக் காரணிகளின் விலைகள் ஈடு செய்யப்படும் என்று குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: www.link.springer.com; www.hetwebsite.net

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *