ஜோஹன் கார்ல் ராட்பெர்டஸ் (Johann Karl Rodbertus) ஆகஸ்ட் 12, 1805இல் பிறந்து டிசம்பர் 6, 1875இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். சமூக சீர்திருத்தம் குறித்த அவரது தொன்மை சார் விளக்கம், Prussian (பிரஷ்ய) அரசாங்கத்தின் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
வாடகை, தேசிய வருமானத்தில் உழைப்பின் பங்கு மற்றும் நெருக்கடிகள் பற்றிய அவரது பகுப்பாய்வுகள், முடியாட்சி, தேசியவாதம் மற்றும் முதலாளித்துவத்தைச் சமரசம் செய்யும் ஒரு சோசலிச நிலைப்பாட்டை உருவாக்க அவருக்கு உதவியது, இது 1870களின் பிரஷ்ய ‘அரசு சோசலிசம்’ (தேசியமயமாக்கல்) அமைப்பை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் அவரை அனுமதித்தது, இது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ரோட்பெர்டஸின் நெருக்கடிகள் பற்றிய கோட்பாடு, தொழிலாளர்கள் தங்கள் ஊதியம் மிகக் குறைவாக இருப்பதால் அவர்கள் உற்பத்தி செய்ததைத் திரும்ப வாங்க முடியாமல் போவதால் அதிகப்படியான உற்பத்தி ஏற்படுகிறது என்ற அனுபவமற்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
தேசிய உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்கு ஏற்ப ஊதியங்கள் உயரும் வகையில் அரசாங்க ஊதிய ஒழுங்குமுறையை அவர் ஆதரித்தார். வாழ்க்கைத் தரம் அதிகரிப்பதால் ஊதியங்கள் இயற்கையாகவே உயரும் என்று அவர் வாதிட்டார். கூலி பெறுபவர்கள், தங்கள் விருப்பத்திற்கு விடப்பட்டால், வாழ்வாதார அளவிலான வருமானத்தை விட அதிகமாகச் சம்பாதிக்க முடியாது என்று ரோட்பர்டஸ் வலியுறுத்தினார்.
தேசிய உற்பத்தித்திறனில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் கூலி பெறுபவர்களுக்கு அல்ல என்றும் மாற்றாகச் சொத்து உடைமையாளர்களால் ஏற்படுவது என்று ராட்பெர்டஸ் நம்பினார். சொத்து உரிமையாளர்கள் மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்ததால், நுகர்வு குறைவு மற்றும் உற்பத்தியில் பின்னடைவு போன்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.
இந்தக் கோட்பாடு சோசலிசத்தின் சில அடிப்படைகளுக்கு இணையாக இருந்தாலும், ராட்பெர்டஸ் முதலாளித்துவத்தின் கருத்தையே நிராகரிக்கவில்லை. மாறாக, ஊதியம் அளிப்பதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் சட்டமாக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதன் மூலம், அவர் அரசின் தலையீட்டிற்கு ஒரு பழமைவாத அடிப்படையை வழங்கினார், இதனால் பொதுவாக சோசலிசக் கொள்கைகள் மற்றும் கட்டளைகளை எதிர்க்கும் குழுக்களிடமிருந்து சமூக சட்டத்திற்கான ஆதரவைப் பெற்றார்.
ஆதாரம்: www.marxists.org; www.britannica.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

