ஜூலை 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் (Economist Trude Scarlett Epstein Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் – முனைவர் பு. அன்பழகன்

ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் (Trude Scarlett Epstein) ஜூலை 13, 1922இல் பிறந்து ஏப்ரல் 27, 2014இல் மறைந்த இந்தியாவில் வளர்ச்சி ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த பிரித்தானிய-ஆஸ்திரிய சமூக மானுடவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். மைசூரில் உள்ள இரண்டு கிராமங்களை மையமாகக் கொண்டு ஒப்பீட்டுக் கண்ணோட்டத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தை எப்ஸ்டீன் ஆய்வு செய்தார்.

பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் உறவுகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சி நிகழ முடியும் என்பது அவரது முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அவரது முனைவர் பட்டத்திற்கு The Impact of the large South Indian Canal Irrigation System on the socio-economy of Mysore villages என்ற தலைப்பில் ஆய்வுசெய்தார், அத்துடன் கர்நாடகா பற்றிய அவரது இரண்டு முக்கியமான படைப்பான South India Yesterday, Today and Tomorrow மற்றும் Village Voices ஆகியவை கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டன.

மண்டியா மாவட்டத்தில் உள்ள மங்களா என்ற கிராம மக்கள், 1950களில் டி. ஸ்கார்லெட் எப்ஸ்டீன் தங்கள் கிராமத்திற்கு வந்தபோது அவருக்கு “கெம்பம்மா” என்று மறுபெயரிட்டு அழைத்தனர். மங்களா கிராமத்தை பற்றிய அவரது ஆய்வு அவருக்குச் சர்வதேச புகழைக் கொண்டுவந்தது.

ஆதாரம்: www.epw.in/journal/2014/29; www.thehindu.com.

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *