தாமஸ் ஜான் சார்ஜென்ட் (Thomas John Sargent) ஜூலை 19, 1943இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். கிறிஸ்டோபர் ஏ. சிம்ஸுடன் சேர்ந்து 2011ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். புதிய பணவீக்க இலக்குகளை ஏற்றுக்கொள்வது அல்லது அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் நிரந்தர கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணங்கள் மற்றும் விளைவுகளை தனிமைப்படுத்துவதில் கவனம் செலுத்தியதற்காக சார்ஜென்டுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேரியல் பொருளாதாரத்தில் பகுத்தறிவு எதிர்பார்ப்பு புரட்சிக்கு சார்ஜென்ட் தொடக்கத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் பொருளாதார முடிவெடுப்பதில் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் பல ஆண்டுகளாக, பொருளாதாரக் கோட்பாடு எதிர்பார்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்தியது பற்றி குறிப்பிடுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), பணவீக்கம், முதலீடு மற்றும் வேலையின்மை போன்ற பேரியல் பொருளாதார குறிகாட்டிகளில் ஏற்படும் மாற்றங்கள் அரசாங்க பொருளாதாரக் கொள்கைகளுடன் எவ்வாறு தொடர்புடையதாக உள்ளது என்பதை அவரது ஆராய்ச்சி ஆராய்கிறது. அவர் பேரியல் பொருளாதாரம், பணவியல் பொருளாதாரம் மற்றும் காலத் தொடர் பொருளாதார அளவீடுகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சார்ஜென்ட் Dynamic Macroeconomic Theory and Rational Expectations and Inflation உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.econlib.org; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

