கோட்ஃபிரைட் ஹேபர்லர் (Gottfried Haberler) ஜூலை 20, 1900இல் பிறந்து மே 6, 1995இல் மறைந்த ஆஸ்திரிய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். ஹேபர்லர் டேவிட், ரிக்கார்டோவின் theory of comparative advantage (ஒப்பீட்டு நன்மை கோட்பாட்டை) மறுசீரமைத்தார். ஹேபர்லர் பன்னாட்டு வர்த்தகம் குறித்த பல கட்டுரைகளை எழுதிய புகழ்மிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், மேலும் அவரது முக்கிய படைப்பான The Theory of International Trade (1937), ஒரு சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
இதில் Oportunity cost (வாய்ப்புச் செலவின்) அடிப்படையில் ஒப்பீட்டு செலவுகளின் கோட்பாட்டை மறுசீரமைத்தது. உற்பத்தி பதிலீட்டு வளைவுக் கோட்டினை (உற்பத்தி-சாத்தியக்கூறு எல்லை) அவர் அறிமுகப்படுத்தினார், இது உற்பத்தி செயல்பாட்டில் பல மாறிகளின் விளைவுகளை கருத்தில் கொள்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியது. இது பன்னாட்டு வர்த்தகக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்கப் புரிதலுக்கு வழிவகுத்தது.
கட்டுப்பாடற்ற அல்லது அரசியல் ரீதியாகக் கட்டுப்பாடற்ற பன்னாட்டு வர்த்தகத்தின் உயர் உற்பத்தித்திறன் மற்றும் உலகளாவிய நன்மைகளுக்கு நவீன அகநிலை மதிப்பு கோட்பாட்டின் அடிப்படையில் முக்கியமான வாதத்தை முன்வைத்த முதல் பொருளாதார வல்லுநர்களில் ஹேபர்லரும் ஒருவர். கீன்ஸியனுக்கு முந்தைய வணிக சுழற்சி கோட்பாடுகளின் தொகுப்பை அடிப்படையாக்க கொண்ட சுழற்சி ஏற்றம் மற்றும் வீழ்ச்சிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அணுகுமுறையையும் அவர் உருவாக்கினார்.
பண விநியோகத்தில் அரசியல் கையாளுதல்களின் காரணப் பங்கைப் பெரிதும் வலியுறுத்தினார். வாங்கும் சக்தி சமநிலை கோட்பாட்டின் செல்வாக்கைப் புதுப்பிக்க ஹேபர்லரும் உதவினார், இது ஒப்பீட்டு விலை நிலைகள் சமநிலை பரிமாற்ற விகிதங்களின் குறிப்பிடத்தக்க தீர்மானகரமானவை என்று கூறுகிறது. நீர்மப் பொறி பற்றிய கெயின்சியன் கோட்பாட்டின் மீதான அவரது விமர்சனம் அவரது Money and the Business Cycle என்ற ஆய்வறிக்கையில் உள்ளது. அவரது வாதம் பின்னர் பொருளாதார நிபுணர் ஆர்தர் செசில் பிகோவால் பிகோ விளைவு எனப்படும் பொருளாதார சொல்லாக மேலும் உருவாக்கப்பட்டது.
ஆதாரம்: www.britannica.com; www.mises.org; www.policonomics.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

