கிரேம் டொனால்ட் ஸ்னூக்ஸ் (Graeme Donald Snooks) ஜூலை 22, 1944இல் ஆஸ்திரேலியாவில் பிறந்த கோட்பாட்டாளர் மற்றும் (cosmologist) அண்டவியல் நிபுணர் ஆவார், அவர் சிக்கலான வாழ்க்கை அமைப்புகளை விளக்க ஒரு பொதுவான இயக்கவியல் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். அவரது dynamic strategy theory (இயக்கவியல்-மூலோபாயக் கோட்பாடு) கடந்த 4,000 மில்லியன் ஆண்டுகளில் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளில் மனித சமூகத்தின் சமகால பொருளாதார சிக்கல்களை (பணவீக்கம், நிதி நெருக்கடிகள், காலநிலை மாற்றம்) பகுப்பாய்வு செய்ய, சமூக-அரசியல் பிரச்சினைகளை ஆராய, கட்டுப்பாடுகள், தலைமையின் தோல்வி, மனதின் தோற்றம், செயல்பாடு மற்றும் செயலிழப்பு ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ய மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய அறிவியல் கணிப்புகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
கிரேம் முன்பு 1989முதல் 2010வரை ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் கோக்லான் ஆராய்ச்சி பேராசிரியராகவும், பொருளாதாரம் மற்றும் வரலாற்று பேராசிரியராக பணியாற்றினார், மேலும் 2010முதல் உலகளாவிய இயக்கவியல் அமைப்புகளின் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் ஸ்னூக்ஸ் 30 புத்தகங்களையும் 100 அறிவார்ந்த கட்டுரைகளையும் புகழ்பெற்ற இதழ்களில் வெளியிட்டுள்ளார். அவரது பணித்தொகுப்பானது, மரபுவழி பொருளாதாரம், காலநிலை-தணிப்பு பொருளாதாரம், மார்க்சியம், புதிய-டார்வினிசம், பரிணாம உளவியல், சுய-அமைப்பு கோட்பாடு உள்ளிட்டவையாகும்.
கிரேமின் 2016இல் வெளியிடப்பட்ட அவரது புத்தகம் Ultimate Reality and Its Dissidents யதார்த்தவாத பொது இயக்கவியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு தனித்துவமான வாழ்க்கை தத்துவத்தை வழங்குகிறது. கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் சிறந்த யதார்த்தவாத தத்துவஞானிகளுக்கு இடையிலான சிக்கலான தொடர்புகளை அவர் ஆராய்ந்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாறும் செலவுகளை கிரேம் ஸ்னூக் பகுப்பாய்வு செய்துள்ளார்.
ஆதாரம்: www.researchgate.net; www.adcforum.org/blog; www.econ.ucdavis.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

