ராபர்ட் மார்க் ஐசக் (Robert Mark Isaac) ஜூலை 27, 1954இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த கல்வியாளர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். ஃப்லோரிடா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தில் போரசிரியராக பணியாற்றியுள்ளார். தொழில் அமைப்பு, அரசு முறைப்படுத்துதல், பொதுப் பொருட்கள், இடர் அறிவு போன்றவற்றில் மார்க் ஐசக்கின் முதன்மையான ஆய்வுக் களமாக அறியப்படுகிறது.
மார்க் ஐசக் அடிப்படை நுண்ணியல் பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க சோதனை பொருளாதாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். அவரது எழுத்துப் பணியானது பல பாரம்பரிய பொருளாதார சிக்கல்களைப் பற்றியதாகவும், குறிப்பாக ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை தொடர்பானவற்றில் புதிய அனுபவ நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது.
மார்க் ஐசக் தனது ஆராய்ச்சியில் Free rider problem (இலவசப் பயனாளி சிக்கல் என்பது பொருளாதாரத்தில் ஒரு வகையான சந்தைத் தோல்வியாகும். இது வளங்கள், பொதுப் பொருட்கள் மற்றும் பொதுவான வளங்களிலிருந்து பயனடைபவர்கள் அவற்றுக்குப் பணம் செலுத்தாதபோது அல்லது குறைவாக செலுத்தும் போது ஏற்படுகிறது) மற்றும் பொதுப் பொருட்களை ஒருங்கிணைக்கிறார். அவரது படைப்புகளில், அவர் நுண்ணியல் பொருளாதாரம், பொதுப் பொருளாதாரம், பேரியல் பொருளாதாரம் மற்றும் கணித பொருளாதாரம் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
ஆதாரம்: www.cosspp.fsu.edu , www.eller.arizona.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

