ஜெஃப்ரி மார்ட்டின் ஹாட்க்சன் (Geoffrey Martin Hodgson) ஜூலை 28, 1946இல் பிறந்த பிரித்தானிய முன்னோடி நிறுவனப் பொருளாதார அறிஞர் ஆவார். இவர், லண்டன் லௌபரோ பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார், மேலும் Journal of Institutional Economics இதழின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.
ஜெஃப்ரி பொருளாதார வரலாறு, மாரக்ஸியம், நிறுவன மற்றும் பரிணாம பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். ஜெஃப்ரி பொருளாதார கருத்துகள், தத்துவம் மற்றும் கணிதப் பின்னணி உடையதாகும். அவரது ஆராய்ச்சியானது, அமைப்புகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும், அமைப்புரீதியான மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றின் புரிதலுக்கும் பயன்படுகிறது.
ஜெஃப்ரி 16 புத்தகங்களையும், கல்விசார் இதழ்களில் 140க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், கல்விசார் புத்தகங்களில் 80 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவரது Libneral Solidarity (2021), Is Socialism Feasible? (2019), Is there a Furture for Heterodox Economics? (2019) Conceptualsing Capitalism (2015), From Pleasure Machines to Moral Communities (2013) ஆகியவை அண்மைக்கால முக்கிய வெளியீடுகளாகும். அவர் நிறுவனப் பொருளாதார இதழின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.
2012ஆம் ஆண்டிற்கான Veblen-Commons Award என்ற விருதினை ஜெஃப்ரிக்கு Association for Evolutionary Economics வழங்கியுள்ளது. இத்துடன் 2014ஆம் ஆண்டிற்கான Schumpeter Prize விருதினை இவருக்கு the International Schumpeter Society என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
ஆதாரம்:
www.geoffreymhodgson.uk; www.digamo.free.fr
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

