1. டேனியல் எல். மெக்ஃபேடன் (Daniel L. McFadden) ஜூலை 29, 1937 ஒரு அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் 2000ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை ஜேம்ஸ் ஜே. ஹெக்மேனுடன் இணைந்து பெற்றார். தனிநபர் அல்லது வீட்டு நடத்தை பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் கோட்பாடு மற்றும் முறைகளை அவர் உருவாக்கியதற்காக இந்த பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. மக்கள் எங்கு வேலை செய்ய வேண்டும், எங்கு வாழ வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக. அவர் தனது ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார். பொருளாதார கோட்பாடு, சுற்றுச்சூழல் பொருளாதாரம், கணிதப் பொருளாதாரம், பொருளாதார அளவீடுகள் மற்றும் சுகாதாரப் பொருளாதாரம் ஆகியவையும் அவரது ஆய்வுக் களங்கங்களில் அடங்கும்.
1974ஆம் ஆண்டில், அவர் நிபந்தனை லாஜிட் பகுப்பாய்வை (conditional logit analysis) உருவாக்கினார். தனிநபர்கள் தங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வரையறுக்கப்பட்ட மாற்றுகளுக்கு இடையில் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதான ஒரு முறையாகும். தனித்துவமான தேர்வின் பகுப்பாய்வு மூலம், மெக்ஃபேடனின் பணி பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கான பயன்பாட்டு விகிதங்களைக் கணிக்க உதவியது, மேலும் அவரது புள்ளிவிவர முறைகள் தொழிலாளர் பங்கேற்பு, சுகாதாரப் பாதுகாப்பு, வீட்டுவசதி (குறிப்பாக முதியவர்களுக்கு) மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
மெக்ஃபேடனால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான அனுபவ முறைகள், மல்டினோமியல் லாஜிட், நிபந்தனை லாஜிட் மற்றும் பிற உள்ளமைக்கப்பட்ட மாதிரிகள் போன்றவை, மதிப்பிடுவதற்கு எளிதான அளவுக்கு தரப்படுத்தப்பட்டுள்ளன. 1990களின் முற்பகுதியில் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எக்கனோமெட்ரிக்ஸ் ஆய்வகத்தை அவர் நிறுவினார், இன்றுவரை அதன் இயக்குநராக பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பள்ளியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
ஆதாரம்: www.nobelprize.org; www.brattle.com; www.econlib.org
*******************************************
2. டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் (Dag Hammarskjold) ஜூலை 29, 1905இல் பிறந்து செப்டம்பர் 18, 1961இல் மறைந்த ஸ்வீடிஷ் பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது பொதுச் செயலாளராக (1953–61) பதவி வகித்தார், அந்த வகையில் அந்த அமைப்பின் கௌரவத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தினார். ஹம்மர்ஸ்க்ஜோல்டனின் மரணத்திற்குப் பின் 1961இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. 1956இல் எழுந்த சூயஸ் நெருக்கடியைத் தீர்ப்பதில் அவரும் கனடிய அரசியல்வாதி லெஸ்டர் பியர்சனும் பங்கேற்றனர். 1958 ஆம் ஆண்டு லெபனான் மற்றும் ஜோர்டானில் ஏற்பட்ட நெருக்கடியிலும் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் முக்கிய பங்கு வகித்தார்.
ஸ்வீடனின் நிதிக் கொள்கையை வடிவமைப்பதில் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் முக்கிய பங்கு வகித்தார். ஹம்மர்ஸ்க்ஜோல்ட் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நாடுகளுக்கும் குறிப்பிட்ட பணிகளுக்காகவோ அல்லது அந்த நாடுகளின் அரசாங்கங்களின் அதிகாரிகளுடன் தனது அறிமுகத்தை மேலும் அதிகரிக்கவும், பல்வேறு பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் பற்றிய அறிவைப் பெறவும் பயணம் செய்தார். உலகின் சிறந்த சர்வதேச அரசு ஊழியராக பணியாற்றியபோது ஹம்மர்ஸ்க்ஜோல்டின் மிகவும் குறிப்பிடத்தக்கச் சாதனையாக, ஐ.நா.வை மிகவும் பயனுள்ளதாக மாற்ற மறுசீரமைத்தல் பணியினை மேற்கொண்டார்.
ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு அடிப்படையை உருவாக்குதல் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து சீனா வரையிலான நெருக்கடிகளில் அவரது “Preventive diplomacy” வெற்றிகரமாகச் செயல்படுத்துதல் ஆகியவை இந்த மறுசீரமைத்தலில் அடங்கும். ஹம்மர்ஸ்க்ஜோல்ட் (செப்டம்பர் 17-18, 1961 இரவு) வடக்கு ரோடீசியாவின் (இப்போது சாம்பியா) என்டோலாவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அவரது விமானம் விபத்துக்குள்ளானபோது கொல்லப்பட்டார். டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
ஆதாரம்: www.britannica.com; www.encyclopedia.com; www.un.org ; www.daghammarskjold.se
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

