சந்தோஷ் மெஹ்ரோத்ரா (Santhosh Mehrotra) ஜூலை 30, 1955இல் இந்தியாவில் பிறந்த ஒரு வளர்ச்சிப் பொருளாதார நிபுணர், அவரது ஆராய்ச்சி மற்றும் எழுத்துக்கள் தொழிலாளர், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, மனித வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான உறவு, குழந்தைகளிடையே நிலவும் வறுமை மற்றும் கல்வியின் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அதிக செல்வாக்கு பெற்றவையாகும்
1988முதல் 1991வரை புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1991முதல் 2006வரை, அவர் இரண்டு ஐ.நா. நிறுவனங்களான யுஎன்டிபி (UNDP) யின் உலகளாவிய மனித மேம்பாட்டு அறிக்கையின் தலைமை பொருளாதார நிபுணராகவும் மற்றும் யுனிசெஃப்பின் உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான இன்னோசென்டி ஆராய்ச்சி மையம் இத்தாலியிலும், வளரும் நாடுகள் குறித்த ஆராய்ச்சித் திட்டத்திற்குத் தலைமை ஏற்று வழிநட்தினார். இந்திய அரசாங்கத்தின் செயலாளர் பதவி, திட்டமிடல் ஆணையத்தின் தேசிய தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாகவும் (2009-14) பணியாற்றினார். தற்போதைய இந்திய அரசின் அமைப்பான NITI, தொழிலாளர் அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அவர் ஆலோசனை வழங்குகிறார்.
இந்தியாவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல அத்தியாயங்களை வடிவமைத்தார். 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2012–17), வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த அத்தியாயங்களை எழுதிய குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். இந்தியாவின் இரண்டாவது தேசிய மனித மேம்பாட்டு அறிக்கையின் குழுத் தலைவராகவும் அவர் இருந்தார். கடினமான சவால்களை எதிர்கொண்ட போதிலும், சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் ஆராய்ச்சித் துறையில் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவராக அவர் நற்பெயரைப் பெற்றுள்ளார். செய்தித்தாள்கள் மற்றும் முன்னணி பத்திரிகைகளுக்கு பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது புகழ்பெற்ற கட்டுரை, “Measuring Trends in Multidimensional Poverty”, ஏப்ரல் 2024 இல் பொருளாதார வார இதழில் (Economic & Political Weekly) வெளியிடப்பட்டது.
ஆதாரம்: www.iza.org; www.indianprincipals.com; www.jnu.ac.in
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

