ஜூன் 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஜார்ஜ் டக்ளஸ் ஆலன் (Economist Roy George Douglas Allen Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஜார்ஜ் டக்ளஸ் ஆலன் – முனைவர் பு. அன்பழகன்

ராய் ஜார்ஜ் டக்ளஸ் ஆலன் (Roy George Douglas Allen) ஜூன் 3, 1906இல் பிறந்து செப்டம்பர் 29, 1983இல் மறைந்த ஒரு பிரித்தானிய நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர், கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். மதிப்பு கோட்பாடு, நுகர்வோர் போக்கு மற்றும் பயன்பாட்டினைப் பற்றிய சிக்கல்களை அவர் விவரித்தார். ஜே.ஆர். ஹிக்ஸ் மற்றும் ஏ.எல். பவுலி போன்ற புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் அவர் இணைந்து பணியாற்றினார்.

பதிலீட்டு நெகிழ்ச்சி (Elasticity of Substitution)

1934ஆம் ஆண்டு “எகனாமிகா” இதழில் வெளியிடப்பட்ட தனது படைப்புகளால் ஆலன் புகழ் பெற்றார், அதில் அவர் தேவைச் சார்பு (demand function), உச்ச பயன்பாட்டு (utility maximization) மற்றும் பதிலீட்டு விளைவு (substation effect) (ஸ்லட்ஸ்கி சமன்பாடு Slutsky equation) ஆகியவற்றை விவரித்தார். இது புதிய தொன்மைப் (neoclassical) பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியின் தொடக்கமானது. கணித மற்றும் பொருளாதார சிக்கல்களை இணைக்கும் ஏராளமான கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை ஆலன் எழுதியுள்ளார். 1938இல் வெளியிடப்பட்ட அவரது புத்தகத்தில், அவர் எதிர்கால சந்ததியினருக்குக் கணிதம் சார்ந்த தெளிவினை வழங்கினார், பகுதியளவு பதிலீட்டு நெகிழ்ச்சி போன்ற பல புதுமையான கருத்துக்களை விவரித்தார்.

“பகுதி பதிலீட்டு நெகிழ்ச்சி” போன்ற பல புதிய கருத்துக்களை ஆலன் அறிமுகப்படுத்தினார். ஹிக்ஸ் மற்றும் ஆலன், பதிலீட்டு நெகிழ்ச்சித்தன்மை பற்றிக் குறிப்பிடுகையில், இரண்டு காரணிகளுக்கிடையே ஏற்படும் பதிலீடுகள் என்பது, இறுதி நிலை பதிலீட்டு விகிதம், இருவேறுபட்ட உள்ளீட்டு விகித மாறுபாடானது, உற்பத்தியானது நிலைத்த தன்மை வைத்திருக்கும் என்று வரையறுக்கிறார். ஹிக்ஸ் மற்றும் ஆலன் இந்த “நிரப்புத்தன்மையின் நெகிழ்ச்சித்தன்மையை” என்பதை “பகுதி பதிலீட்டின் நெகிழ்ச்சித்தன்மை” என்று மறுபெயரிட்டனர். ஆலன் ஒரு வித்தியாசமான அளவை முன்மொழிந்தார். பதிலீட்டின் ஆலன் நெகிழ்ச்சி என்பது பாரம்பரிய அளவீடு ஆகும், மேலும் பல்வேறு சூழல்களில் மாற்று நடத்தை மற்றும் கட்டமைப்பு உறுதியற்ற தன்மையை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

மதிப்பு கோட்பாடு மற்றும் நுகர்வோர் நடத்தைக்கான பங்களிப்புகளுக்காக ஆலன் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக, தேவையின் நெகிழ்ச்சித்தன்மை குறித்த அவரது பணி மிகவும் புகழ் மிக்கதாக இருந்தது. நுகர்வோர் தேவையின் கணித மாதிரியை உருவாக்குவதன் மூலம் கணித பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் அவர் ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். மதிப்பு மற்றும் நுகர்வோர் நடத்தை கோட்பாடு பற்றிய விரிவான -பகுப்பாய்வை வழங்கிய Theory of Value (1951) என்ற ஒரு முக்கிய படைப்பை ஆலன் வழங்கினார்.

ஆதாரம்

www.scribd.com; www.sticerd.lse.ac.uk; www.hetwebsite.net; www.en-academic.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *