அரவிந்த் சுப்பிரமணியன் (Arvind Subramanian) ஜூன் 7, 1959இல் பிறந்த புகழ்பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர் மற்றும் 2014 முதல் 2018 வரை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பணியாற்றினார். அரவிந்த் சுப்பிரமணியன் அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும், அசோகா பொருளாதாரக் கொள்கைக்கான மையத்தின் (ACEP) நிறுவன இயக்குநராகவும் இருந்தார்.
உருகுவே சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது 1988 முதல் 1992 வரை கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தத்தில் (GATT) பணியாற்றினார், முன்னதாக அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி அரசாங்கப் பள்ளியில் (1999–2000) பேராசிரியராக பணியாற்றினார்.
பன்னாட்டுப் பண நிதியத்தின் ஆராய்ச்சித் துறையில் உதவி இயக்குநராகச் சுப்பிரமணியன் பணியாற்றினார். இந்தியா, சீனாவின் பொருளாதாரம் மற்றும் மாறிவரும் உலகப் பொருளாதார சக்தியினைப் பற்றி ஆழமான நிபுணத்துவம் பெற்றவராவார். சுப்பிரமணியன் தற்போது பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள வாட்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் பப்ளிக் அஃபர்ஸில் மூத்த உறுப்பினராக உள்ளார்.
வளர்ச்சி, வர்த்தகம், மேம்பாடு, நிறுவனங்கள், உதவி, எண்ணெய், இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) தொடர்புடையப் புகழ்பெற்ற கட்டுரைகளை சுப்பிரமணியன் எழுதியுள்ளார். அவரது புகழ்பெற்ற புத்தகம், Eclipse: Living in the Shadow of China’s Economic Dominance, செப்டம்பர் 2011 இல் வெளியிடப்பட்டது, இது பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அவரது மற்றொரு முக்கியமான புத்தகம், India’s Turn: Understanding Economic Transformation 2008இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது.
ஆதாரம்
www.theigc.org; www.cepr.org; www.foreignaffairs.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

