ராபர்ட் ஜே. ஆமன் (Robert J. Aumann) ஜூன் 8, 1930இல் பிறந்த இஸ்ரேலிய கணிதவியலாளர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் 2005ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தாமஸ் சி. ஷெல்லிங்குடன் பகிர்ந்து கொண்டார்.
பொருளாதாரத்தில் ஆமனின் முதன்மை பங்களிப்பானது, ஆட்டக் கோட்பாட்டின் கணிதத் துறையில் ஒரு பாடமான தொடர்ச்சியான ஒத்துழையாமை சந்திப்புகளின் பகுப்பாய்வை உள்ளடக்கியது. அவர் தனது நோபல் பரிசு சொற்பொழிவுக்கு “War and Peace” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார், அதில் அவர் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்களின் தீர்வு குறித்து விவாதித்தார்.
வீரர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு தகவல் மற்றும் அறிவுசார் நிலைமைகளின் கீழ் மீண்டும் மீண்டும் விளையாடும் ஆட்டக் கோட்பாட்டில் ஆமனின் ஆய்வானது கவனம் செலுத்துகிறது. வர்த்தக கூட்டாளிகள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் அல்லது குற்றச் செயல்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட துறையில் வெவ்வேறு “வீரர்கள்” என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முயற்சிக்கும் ஒரு வழிவகையில் அறிவியலான ஆட்டக் கோட்பாட்டின் ஆய்வுக்கு ஆமனின் முக்கிய பங்களிப்பு உள்ளது. குறிப்பாக, வீரர்கள் மீண்டும் மீண்டும் அதே சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஆட்டத்தை ஆமன் பகுப்பாய்வு செய்தார்.
ஆதாரம்
www.britannica.com; www.nobelprize.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

