ஜூன் 10: வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஜேம்ஸ் ஷார்ட் (James Short) பிறந்த தினம் இன்று | தொலைநோக்கி (Telescope) கண்டுபிடித்தவர்

வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஜேம்ஸ் ஷார்ட் (James Short) பிறந்த தினம் இன்று

ஜேம்ஸ் ஷார்ட் என்ற விஞ்ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர் ஒரு வானியல் மற்றும் கணிதவியல் விஞ்ஞானி ஆவார். அவரது பிறந்த நாள் 1710 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் நாள். அதாவது சுமார் 315 ஆண்டுகளுக்கு முன்னர்பிறந்திருக்கிறார். அவர் ஒரு ஸ்காட்டிஷ் கணிதவியலாளர்.

மேலும் அவர் ஒளியியல் நிபுணரும் ஆவர். அவர் ஒளியியல் கருவிகள், முக்கியமாக தொலைநோக்கிகள் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஜேம்ஸ் ஷார்ட் (James Short) தொலைநோக்கி தயாரிப்பாளராக, தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் சுமார் 1,360 அறிவியல் கருவிகளை தயாரித்தார்.

துவக்க கால வாழ்க்கை & கல்வி

ஜேம்ஸ் ஷார்ட் (James Short) 1710 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் நாள் இங்கிலாந்தின் எடின்பர்க்கில் பிறந்தார். இவரின் தந்தை பெயர்: வில்லியம் ஷார்ட் (William Short); அன்னையின் பெயர்: மார்கரெட் கிரியர்சன் (Margaret Grierson). அவரது தந்தை தச்சு வேலை செய்பவர்.

ஆனால் ஜேம்ஸ் ஷார்ட்டின் 10 வயதில் அவரது பெற்றோர் இறந்ததால், அவருக்கு யாரும் ஆதரவு இல்லாததால் அநாதை ஆனார். எனவே வேறு வழியின்றி அவர் , ஹெரியட்ஸ் மருத்துவமனையின் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கேயே இரண்டு ஆண்டுகள் படித்தார். பின்னர் ஜேம்ஸ் ஷார்ட் 12வது வயதில் ராயல் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் கிளாசிக்கல் படிப்பில் சிறந்து விளங்கினார்.

வானியலுக்கு மாறிய ஜேம்ஸ் ஷார்ட் (James Short)

1726 ஆம் ஆண்டில் அவர் இறைவழிபாட்டின் தெய்வீகத்தன்மையைப் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்தில்சேர்ந்தார். ஷார்ட் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஊழியத்திற்கான வேட்பாளராக நுழைந்தார். ஆனால் அங்கு நடந்த கதை வேறு. ஜேம்ஸ் ஷார்ட் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில சேர்ந்த பின்னர், அங்கு இருந்த கணிதப் பேராசிரியராக இருந்தவர் “கொலின் மெக்லாரின்” (Colin Maclaurin).

ஜேம்ஸ் ஷார்ட் கொலின் மெக்லாரினின் உரையாலும் சொற்பொழிவுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே அவர் இறைவழிபாட்டுத்துறையிலிருந்து மாறி, பின்னர், வானியல் மற்றும் கணிதத்திற்கு மாறினார். இதுதான் ஜேம்ஸ் ஷார்ட்டை வானியலாளராகவும், கணிதவியளாலராகவும் மாற்றிய விந்தை

James Short | Optical Instruments, Telescopes, Astronomy | Britannica

தொலைநோக்கி உற்பத்தி

கொலின் மெக்லாரினுக்கு, ஜேம்ஸ் ஷார்ட் (James Short) மேல், நன்கு படிக்கும் மாணவன் என்பதாலும், பெற்றோர் இல்லாதவர் என்பதாலும் ஓர் அன்பும், ஈடுபாடும் உருவானது. ஷார்ட்டின் கணிதத் திறமைகளை உணர்ந்த மெக்லாரின், கணிதம் மற்றும் ஒளியியலில் அவரது ஆர்வத்தை ஊக்குவித்தார். எனவே அவர் 1732 ஆம் ஆண்டில், தொலைநோக்கி கட்டுமானத்தில் சோதனைகளுக்காகப் பணியாற்றுவதற்காக பல்கலைக்கழகத்தில் தனது அறைகளைப் பயன்படுத்த ஷார்ட்டுக்கு மெக்லாரின் அனுமதி அளித்தார்.

அதன் பின்னர் ஜேம்ஸ் ஷார்ட் தயாரித்த தொலைநோக்கி கருவிகளின் தரம் சிறப்பாகவே இருந்தது. எனவே கொலின் மெக்லாரின், அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு உதவினார். ஆகவே,ஜேம்ஸ் ஷார்ட் 1737ஆம் ஆண்டு, மார்ச் 24 ஆம் நாள், ராயல் சொசைட்டியின் ஃபெலோவாக/உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொலைநோக்கியில் வெற்றி

ஜேம்ஸ் கிரிகோரி என்பவரின் பரிந்துரைப்படி, ஜேம்ஸ் ஷார்ட்டின் முதல் தொலைநோக்கிகளில் கண்ணாடி கண்ணாடியால் ஆனது. அப்படித்தயாரித்தார். இருப்பினும் பின்னர் அவர் உலோக கண்ணாடியை மட்டுமே பயன்படுத்தினார்.

இதனால் தொலைநோக்கியின் பயன்பாட்டில், அவற்றுக்கு உண்மையான பரவளைய (parabolic) மற்றும் நீள்வட்ட வடிவங்களை (eclliptic) வழங்குவதில் வெற்றி பெற்றார். அவர்தான் முதல் உண்மையான பரவளைய – கிட்டத்தட்ட சிதைவு இல்லாத – பிரதிபலிப்பு தொலைநோக்கிகளுக்கான கண்ணாடிகளை உருவாக்கினார்

அதன் பின்னர் ஷார்ட் தொலைநோக்கி தயாரிப்பை தனது தொழிலாக ஏற்றுக்கொண்டார். அதை அவர் முதலில் எடின்பர்க்கில் 1738ஆம் ஆண்டு வரை பயிற்சி செய்தார. ஷார்ட் 1738 இல் லண்டனில் குடியேறினார், பின்னர் அவர் தொலைநோக்கி தயாரிப்பை லண்டனுக்கு மாற்றினார்.

James Short (mathematician) - Wikipedia

விரைவில் தனது சிறந்த பணிக்காக புகழையும் செல்வத்தையும் பெற்றார். அவர் 1,000 க்கும் மேற்பட்ட பிரதிபலிப்பு தொலைநோக்கிகளுக்கு உலோகக் கண்ணாடிகளை தயாரித்தார். ஆனால் அவை அப்போது கிடைத்ததைவிட சிறந்தவை.

ஷார்ட்டின் அனைத்து தொலைநோக்கிகளும், கிட்டத்தட்ட கிரிகோரியன் வடிவத்தில் இருந்தன. இருப்பினும் அவற்றில் சில இன்றும் அவற்றின் அசல் உயர் மெருகூட்டல் மற்றும் கூர்மையான வரையறையைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஜான் ஹாட்லி,ஜேம்ஸ் ஷார்ட்டின் கண்ணாடிகளின் பரவளையத்தை பரிசோதித்தார். ஆனால் ஷார்ட் ஒரு சிறந்த நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அவற்றை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். அதன் விவரங்கள் துல்லியமாகத் தெரியவில்லை.

பெருமைகள்

 இங்கிலாந்து ராணி கரோலின், 1736 ஆம் ஆண்டில், தனது இரண்டாவது மகன் வில்லியமுக்கு, கணிதம் கற்பிக்குமாறு அவரிடம் கேட்டார்.
 ஷார்ட் , 1737ஆம் ஆண்டு, மார்ச் 24ஆம் நாள், ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 மேலும் 1758 ஆம் ஆண்டு, அவர் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டு உறுப்பினரானார்.
 1754 ஆம் ஆண்டு, ஷார்ட் கலை, உற்பத்தி மற்றும் வணிக ஊக்குவிப்பு சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

இறப்பு

ஜேம்ஸ் ஷார்ட் (James Short) 1768ஆம் ஆண்டு, ஜூன் 14ஆம் நாள் லண்டனில் உள்ள நியூவிங்டன் பட்ஸ் என்றார் ஊரில் மரணித்தார். தனது தொழிலில் இருந்து கணிசமான செல்வத்தை ஈட்டினார். தனது தொலைநோக்கி தயாரிப்பு கைவினைப் பற்றி ரகசியமாக வைத்திருந்து,, அவர் இறப்பதற்கு சற்று முன்பு தனது கருவிகளை அழிக்க உத்தரவிட்டார்

எழுதியவர் : 

பேரா. சோ. மோகனா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *