ஜூன் 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் தியோபால்ட் (Economist Robert Theobald Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராபர்ட் தியோபால்ட் – முனைவர் பு. அன்பழகன்

ராபர்ட் தியோபால்ட் (Robert Theobald) ஜூன் 11, 1929இல் பிறந்து நவம்பர் 27, 1999இல் மறைந்த இந்திய வம்சாவளி பொருளாதார அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் சர்வதேச அளவில் அறியப்பட்ட எதிர்காலத்தை பற்றிக் கணிக்கக் கூடியவராக அறியப்படுகிறார். ராபர்ட் தியோபால்ட் 1929இல் இந்தியாவில் பிறந்தார், ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபரின் மகனாக அவர் 16 வயதில் (1945) இங்கிலாந்துக்குச் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் உயர் கல்வியைப் பெற்றார். பொருளாதாரத்தில், அவர் செழிப்புமிகு பொருளாதாரம் மற்றும் அடிப்படை வருமான உத்தரவாதத்தை ஆதரிப்பத்து எழுதியதில் மிகவும் பிரபலமானவர்.

1960களில் அவரும் அவரது சில நண்பர்களும் இணைந்து The Triple Revolution என்ற புத்தகத்தை வெளியிட்டபோது அவர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். இது ஒரு அறிக்கையாகும் இதனை ஜனாதிபதி ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது. ஆயுதங்கள், கணினி மற்றும் மனித உரிமைகள் புரட்சிகள் தொழில்துறைக்குப் பிந்தைய ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகின்றன என்று அது வாதிட்டது. பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் பொருள்முதல்வாத கலாச்சாரத்தில் வழக்கமான நம்பிக்கையை தியோபால்ட் கேள்விக்குள்ளாக்கினார் மற்றும் விமர்சித்தார் – இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், உலக மக்கள் பலருக்கு வாய்ப்பு மற்றும் வருமானத்தை வழங்கத் தவறிவிடுவதாகவும் அவர் கருதினார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்கவும், உலகளவில் பரப்பவும் அல்லது பின்பற்றவும் முயல்வதை எதிர்த்து அவர் எச்சரித்தார்.

உலகளாவிய அடிப்படை வருமானம்

A Universal Basic Income (UBI) (உலகளாவிய அடிப்படை வருமானம்) என்பது அனைத்து வயதுவந்த தனிநபர்களுக்கும் அளிக்கப்படும் பணமாகும், இதனைக்கொண்டு மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கிறது. இது எந்த வேலை அல்லது செயல்பாட்டுச் சோதனைகளும் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 1960களின் முற்பகுதியில், அமெரிக்க எதிர்காலத்தினை கணிக்கக்கூடிய ராபர்ட் தியோபால்ட் கணினிகள் வேகமாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாறும் என்று கணித்தார். கணினிகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் வழக்கமான பணிகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள முடிந்ததால், தொழிலாளர்கள் இயந்திரங்களால் இடம்பெயர்ந்து விடுவார்கள். உடல் உழைப்பினை நல்கும் தொழிலாளர்கள் (நீல காலர்) மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட அறிவுசார் உழைப்பினை நல்கும் (வெள்ளை காலர்) தொழிலாளர்கள் இருவரும் பாதிக்கப்படுவார்கள். வேலைகளுக்கும் வருமானத்திற்கும் இடையிலான தற்போதைய இணைப்பை நாம் உடைக்க வேண்டும். இந்த திசையில் தேவையான முதல் படி உத்தரவாதமான வருமானம் ஆகும். சுதந்திர சந்தை நிறுவனங்கள் இனி வருமானம் தேவைப்படும் அனைவருக்கும் போதுமான வேலைகளை உருவாக்க முடியாது என்று தியோபால்ட் வாதிட்டார். உற்பத்தியை அதிகரிக்கவும் வேலைகளை உருவாக்கவும் முயற்சிக்கும் வகையில், அரசாங்கங்கள் சந்தையில் தலையிடுவதன் மூலம் பதிலளித்தன. உத்தரவாத வருமானம் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற துறைகளில் தனிநபர்கள் தொழில்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் தனிப்பட்ட சுதந்திரத்தை அதிகரிக்கும் என்று அவர் வாதிட்டார்.

தியோபால்ட் ஒரு பிரபலமான விரிவுரையாளர், ஆசிரியர் மற்றும் அவர் சொல்ல விரும்பியது போல், ஒரு தீவிர வலையமைப்பாளராகவும் இருந்தார். அவர் ஒரு சளைக்காத சமூக அமைப்பாளராகவும், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக இணையத்தின் ஆரம்பக்கால ஆதரவாளராகவும் இருந்தார். அவர் The Rapids of Change, Turning the Century and Rewoking Success உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது மற்றோர் புகழ்பெற்ற படைப்பான The Guaranteed Income: Next Step in Economic Evolution? 1966 இல் வெளியிடப்பட்டது.

ஆதாரம்

www.studsterkel.wfmt.com; www.m.imdb.com; www.fee.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *