ஹென்ட்ரிகஸ் ஜோஹன்னஸ் விட்டீவீன் (Hendrikus Johannes Witteveen) ஜூன் 12, 1921இல் பிறந்து ஏப்ரல் 23, 2019இல் மறைந்த ஒரு டச்சு அரசியல்வாதி மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். விட்டீவீன் நெதர்லாந்து பொருளாதாரப் பள்ளியில் (இப்போது எராஸ்மஸ் பல்கலைக்கழகம் ரோட்டர்டாம்) பொருளாதார அறிஞர் ஜான் டின்பெர்கனின் மாணவர் ஆவார், பின்னர் அவருக்குப் பொருளாதாரத்தில் முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
விட்டீவீன் நெதர்லாந்து அரசாங்கத்தில் நிதி ஆய்வாளராக இருந்தார் (1945–48). அவர் நிதி அமைச்சராகவும் (1963–65, 1967–71) துணைப் பிரதமராகவும் (1967–71) பணியாற்றினார். 1973 முதல் 1978 வரை விட்டீவீன் பன்னாட்டுப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார், உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பின் போது அதை வழிநடத்தினார்.
1973 அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தது, இறுதியில் மந்தநிலை அதிகரித்தது – உலகளாவிய மந்தநிலை மற்றும் பணவீக்கம் உருவானது இதனை Stagflation (தேக்க வீக்கம்) என்று அழைக்கப்பட்டது. பெரும் மந்தநிலைக்குப் பிறகு முதல் முறையாக, உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களும் ஒரே நேரத்தில் மந்தநிலையில் இருந்தன. விட்டீவீன் IMF இன் நிர்வாக இயக்குநராக, நிலையான விகிதம் மற்றும் மிதக்கும் செலாவணி பரிமாற்றங்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய வேண்டியிருந்தது.
நிதி அதன் உறுப்பு நாடுகளின் மாற்று விகிதக் கொள்கைகள் மீது “உறுதியான கண்காணிப்பை” மேற்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாட்டைப் பேச்சுவார்த்தை நடத்தினார் விட்டீவீன். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஏழை நாடுகளுக்கு வருவாயை “மறுசுழற்சி” செய்யும் 8 பில்லியன் டாலர் நிவாரண நடவடிக்கையை வடிவமைத்து. விட்டீவீன் நிலைமையை அமைதிப்படுத்த உதவினார், எண்ணெய் வாங்கவும், கட்டண ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவும் மற்றும் உலக வர்த்தகத்தை ஆதரிக்க IMF கடனை பயன்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கினார்.
ஆதாரம்: www.omfif.org; www.nytimes.com; www.ranker.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

