ஹெர்பர்ட் அலெக்சாண்டர் சைமன் (Herbert Alexander Simon) ஜூன் 15, 1916இல் பிறந்து பிப்ரவரி 9, 2001இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல் விஞ்ஞானி ஆவார். பொருளாதார அமைப்புகளுக்குள் முடிவெடுக்கும் செயல்முறை குறித்த முன்னோடி ஆராய்ச்சிக்காக சைமன் 1978இல் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர் செய்த பங்களிப்புகள் உட்படக் கணினி அறிவியலில் அவர் செய்த பணிக்காக 1975இல் ஏ.எம். டூரிங் விருதையும் பெற்றார், மேலும் 1986இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கத்தை வென்றார். சைமன் தனது முதல் புத்தகமான Administrative Behaviour 1947இல் வெளியிட்டார். நடத்தை போக்குகள் பற்றிய ஆய்வுகள் என்பது மனித நடத்தை பற்றிய இடைநிலை ஆய்வுகள் ஆகும், அவை பல்வேறு சமூக அறிவியல் துறைகளிலிருந்து தெளிவினைப் பெறுகின்றன.
Behaviourism – நடத்தை வாதம்
“நடத்தைவாதம்” என்று அழைக்கப்படும் நிறுவன முடிவெடுக்கும் கோட்பாட்டின் மீதான தனது பணிக்காக சைமன் மிகவும் பிரபலமானவர். ஒற்றை, முடிவெடுக்கும், லாபத்தை அதிகரிக்கும் தொழில்முனைவோர் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மாதிரியாக்கத்திற்கான மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட தொன்மை அணுகுமுறையை முடிவெடுப்பதில் பங்களிக்கும் பல காரணிகளை அங்கீகரிக்கும் அணுகுமுறையுடன் மாற்ற அவர் முயன்றார்.
முடிவெடுக்கும் செயல்முறையின் மூன்று நிலைகள் அறிவுத் திறன் சார் செயல்பாட்டு நிலை, வடிவமைப்பு செயல்பாட்டு நிலை மற்றும் தேர்வு செயல்பாட்டு நிலை காணப்படுகிறது என்கிறார் சைமன். சைமனின் முடிவெடுக்கும் கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகையான நிறுவன முடிவுகள் உள்ளன, அவை “திட்டமிடப்பட்டது” மற்றும் “திட்டமிடப்படாதது”. முடிவெடுப்பது என்பது தனிநபருக்கு “போதுமான” விளைவுகளை அடைவது, அவர்களின் வரையறுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மற்றவர்களின் நலன்களைச் சமநிலைப்படுத்துவது என்று சைமன் நம்பினார். சைமன் இதை “திருப்திப்படுத்துதல்” என்று அழைத்தார்.
சைமனின் கூற்றுப்படி, இந்த தத்துவார்த்த கட்டமைப்பு, முடிவெடுப்பது விலைகள் மற்றும் உற்பத்தியைப் பாதிக்கக்கூடிய ஒரு உலகத்தைப் பற்றிய மிகவும் யதார்த்தமான புரிதலை வழங்குகிறது. மனிதர்கள் தங்கள் சொந்த “அறிவாற்றல் வரம்புகளால்” கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று அவர் விவரித்தார். முடிவுகள் ஒரு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதியாகும், மேலும் அவை சரியாகவும் சரியான நேரத்திலும் எடுக்கப்படாவிட்டால், அவை நிறுவனத்தின் இலக்குகளுக்குத் தீங்கை விளைவிக்கும் என்று சைமன் வாதிட்டார். முடிவெடுப்பது என்பது இரண்டு படிகளை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும்: முதலாவது முடிவு தானே எடுப்பது, இரண்டாவது அதன் பயன்பாடு அடிப்படையாகும். இரண்டு கட்டங்களும் சமமாக முக்கியமானவை என்கிறார் சைமன்.
Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவின் அடித்தளத்தினை உருவாக்கியவர்களில், ஹெர்பர்ட் ஏ. சைமன் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். 1950களின் நடுப்பகுதியில், ரேண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சைமன் மற்றும் ஆலன் நியூவெல் ஆகியோர் கணினிகளில் மனித முடிவெடுப்பதை உருவகப்படுத்த முயன்றனர். 1955ஆம் ஆண்டில், கணிதக் கோட்பாடுகளை நிரூபிக்கக்கூடிய ஒரு கணினி நிரலை அவர்கள் எழுதினர். இதனை அவர்கள் “சிந்திக்கும் இயந்திரம்” என்று அழைத்தனர். சைமனின் பார்வையில், மனித மனம் “அற்புதமானது, ஆனால் புரிந்துகொள்ள முடியாதது அல்ல”, என்றார், மேலும் சிந்தனைமிக்க முடிவுகளை – பகுத்தறிவு, வரம்புக்குட்பட்ட, உள்ளுணர்வு மற்றும்/அல்லது படைப்பாற்றல் – மாதிரியாகக் கொள்ளலாம் என்றார்.
ஆதாரம்
www.investopedia.com; www.econlib.org; www.informs.org; www.nobelprize.org; www.unacademy.com; www.hetwebsite.net
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

