வில்லியம் ஃபோர்சித் ஷார்ப் (William Forsyth Sharpe) ஜூன் 16, 1934இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் முதலீட்டு செய்ய முடிவெடுப்பதற்கு உதவும் மாதிரிகளை உருவாக்கியதற்காக ஹாரி மார்கோவிட்ஸ் மற்றும் மெர்டன் மில்லருடன் சேர்ந்து 1990ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
Capital Asset Pricing Model (மூலதன சொத்து விலை நிர்ணய மாதிரி)
ஷார்ப் Capital Asset Pricing Model (CAPM)ஐ முன்மொழிந்தார், இது பங்கு பத்திரங்களின் விலைகள், இடர்கள் மற்றும் திரும்பப் பெறும் வருமானத்தைப் பற்றி விளக்கும் ஒரு நிதி மாதிரியாகும். ஷார்ப்பின் கோட்பாடு, இடர் சார்ந்த சொத்துக்களின் சந்தை விலை நிர்ணயமானது அவற்றை முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் (நிதி முதலீடுகளின் தொகுப்பு) இணைக்க அனுமதிப்பதைப் பொறுத்தது அதற்கு முக்கியக் காரணம் அவை குறைந்த இடர் முதலீடுகளாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார். அவரது கோட்பாடுகள் போர்ட்ஃபோலியோ இடர்களின் அளவீடான “பீட்டா” என்ற கருத்துக்கு வழிவகுத்தன. முதலீட்டு ஆய்வாளர்கள் ஒரு பங்கின் இடர், பரந்த பங்குச் சந்தையின் அபாயத்துடன் ஒப்பிடுவதற்கு அடிக்கடி பீட்டா கெழுவினைப் பயன்படுத்துகின்றனர். CAPM கட்டமைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஷார்ப்பின் பிற்கால வரைவுகள், இப்போது ஷார்ப் விகிதம் என்று அழைக்கப்படுகிறது.
Sharp Ratio (கூர்மையான விகிதம்)
ஷார்ப் அடிக்கடி குறிப்பிடப்படும் ஷார்ப் விகிதத்தையும் உருவாக்கினார். ஷார்ப் விகிதம், நிலையற்ற தன்மையின் ஒரு அலகிற்கான (யூனிட்டுக்கான) இடர் அற்ற விகிதத்தில் ஈட்டப்படும் அதிகப்படியான வருமானத்தை அளவிடுகிறது. இந்த விகிதம் முதலீட்டாளர்கள் அதிக வருமானம் புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளா அல்லது அதிகப்படியான இடர் எடுப்பதாலா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. இடர்சார் சொத்துக்களின் சந்தை விலை நிர்ணயம், அவை குறைந்த இடருடைய முதலீடுகளுடன் இணைக்கப்படலாம் என்பதால், முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் பொருந்த உதவியது என்பதை ஷார்ப்பின் கோட்பாடு காட்டுகிறது.
ஷார்பின் புகழ்பெற்ற புத்தகங்கள், Portfolio Theory and Capital Markets, Fundamentals of Investment, Investments, Investors and Markets: Protfolio Choice, Asset Prices and Investment Advice போன்றவை ஆகும்.
ஆதாரம்
www.investopedia.com; www.britannica.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

