பிராங்கோ மோடிக்லியானி (Franco Modigliani) ஜூன் 18, 1918இல் பிறந்து செப்டம்பர் 25, 2003இல் மறைந்த இத்தாலிய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், வாழ்க்கைச் சுழற்சி கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காகவும் நிதிச் சந்தைகள் குறித்த விரிவான ஆராய்ச்சிக்காகவும் அவருக்கு 1985ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். நுகர்வுக் கோட்பாடு, நிதிப் பொருளாதாரம் மற்றும் மோடிக்லியானி-மில்லர் தேற்றம் ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
Life Cycle Hypothesis (வாழ்க்கைச் சுழற்சி அனுமானம்)
நுகர்வு செலவினத்தை வருமானத்துடன் தொடர்புப்படுத்தும் கீன்ஸின் நுகர்வுச் சார்புக் கோட்பாட்டை மேம்படுத்த முயன்றார் மோடிக்லியானி, அதற்காகத் தனது “வாழ்க்கைச் சுழற்சி” நுகர்வு மாதிரியை அறிமுகப்படுத்தினார். வாழ்க்கைச் சுழற்சி கோட்பாட்டில், தனிநபர்கள் தங்கள் இளையவர்களாக இருக்கும்போது, தாங்கள் வேலை செய்த ஆண்டுகளில் செல்வத்தைக் குவிப்பார்கள், இச் செல்வத்தை தங்கள் சந்ததியினருக்குக் கடத்துவதற்காகக் குவிக்கமாட்டார்கள், மாறாக இச் செல்வமானது அவர்களின் வயதான காலத்தில் நுகர்வதற்காக என்று கூறுகிறது. ஒப்பீட்டளவில் இளைய அல்லது வயதான மக்கள்தொகை கொண்ட சமூகங்களில் சேமிப்பு விகிதங்களின் மாறுபட்ட விகிதங்களை விளக்க இந்த கோட்பாடு உதவியது மேலும் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் எதிர்கால விளைவுகளைக் கணிப்பதில் உதவியாக இருந்தது.
Modigliani-Miller Theorem (மோடிக்லியானி-மில்லர் தேற்றம்)
சில அனுமானங்களின் கீழ், ஒரு நிறுவனத்தின் மதிப்பு அதன் கடன்-பங்கு விகிதத்திலிருந்து சுதந்திரமானது என்பதை மோடிக்லியானி, மெர்டன் மில்லருடன் சேர்ந்து நிரூபித்தார். மோடிக்லியானி-மில்லர் தேற்றம் ஒரு நிறுவனத்தின் மூலதன அமைப்பு மற்றும் ஈவுத்தொகை கொள்கைக்கும், அதன் சந்தை மதிப்பு மற்றும் மூலதனச் செலவுக்கும் இடையிலான உறவை விளக்குகிறது. ஒரு உற்பத்தி நிறுவனம் அதன் செயல்பாடுகளுக்கு எவ்வாறு நிதியளிக்கிறது என்பது அந்த நடவடிக்கைகளின் லாபத்தை விடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த தேற்றம் நிரூபிக்கிறது.
Rational Expectation Theory (பகுத்தறிவு எதிர்பார்ப்பு கோட்பாடு)
மோடிக்லியானி தனது 1954ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் பகுத்தறிவு எதிர்பார்ப்புகளின் கோட்பாட்டிற்கு ஒரு அடிப்படை பங்களிப்பை வழங்கினார், அதில் மக்கள் அரசாங்கக் கொள்கை அவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் தங்கள் பொருளாதார நடத்தையைச் சரிசெய்கிறார்கள் என்று வாதிட்டார். மாறுபட்ட வகையில், பகுத்தறிவு எதிர்பார்ப்புக் கோட்பாடு மற்ற பொருளாதார வல்லுநர்களால் கீன்ஸியன் பேரியல் பொருளாதாரக் கொள்கையின் செயல்திறன் குறித்த ஒரு பெரிய மற்றும் பரந்த விமர்சனமாக உருவாக்கப்பட்டது.
Monetary Policy (பணவியல் கொள்கை)
கொள்கை வகுப்பார்கள் கொள்கையை வகுக்கும்போது உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று மோடிக்லியானி வாதிட்டார். இவ் இலக்கானது, பணவீக்கமற்ற வேலையின்மை விகிதமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார், இப் பணவீக்கமானது, சுமார் 5.5% என அவர் மதிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
Modigliani and Merton Miler (1958): “The Cost of Capital. Corporation Finance, and the Theory of Investment,” American Economic Review.
Modigliani (1949): “Fluctuations in the Saving-Income Ratio: A Problem in Economic Forecasting,” In Studies in Income and Wealth.
Modigliani and Albert Ando (1963): “The Life Cycle Hypothesis of Saving: Aggregate Implications and Tests,” American Economic Review.
Modigliani and Richard Brumberg (1954): “Utility Analysis and the Consumption Function,” In Post-Keynesian Economics, edited byKenneth Kurihara.
ஆதாரம்
www.britannica.com; www.econlib.org; www.investopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

