இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் (June 19 National Reading Day) - வாசிப்பை நேசிப்போம் - முனைவர் அ.முஷிரா பானு

இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு

இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம்

– வாசிப்பை நேசிப்போம் –

– முனைவர் அ.முஷிரா பானு

இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமை யான நினைவுகள் இன்றைய தலைமுறையி வருக்கு உள்ளனவா?

சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் தேரமின்மை காரணமாக வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல.

சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை உணர ஆரம்பித்தாள். நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல் நட்பைத்தேடாமல் நூலகங்களில் அந்த இனிய நட்பைக்கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப்புத்தகங்களைப் படிப்பது அல்ல: பொது அறிவு தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்தெடுக்க உதவும்.

ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

நாம் உலகில் பார்த்த பார்க்கும் தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேச்சாளர்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் கருத்துகள் மூலம் இந்த சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகளே. செறிந்த கருத்துகள் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கும் உளிகளாகும். எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணர்வுகளையும், செய்திகளையும், அவர்களுடைய கற்பனைகளையும், வரலாறுகளையும் நல்கி அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 19-ஆம்தேதி தேசிய வாசிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்தில் பி.என். பணிக்கர் என்பவர் நூலக இயக்கத்தை தொடங்கி அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தைளை ஊக்குவித்தார். கேரளத்தின் வாசிப்பு தினமான ஜூன் 19-ஐ இந்தியாவின் தேசிய வாசிப்பு தினமாக 2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் (June 19 National Reading Day) - வாசிப்பை நேசிப்போம் - முனைவர் அ.முஷிரா பானு

மத்திய அரசும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களை மேம்படுத்துவதற்காக (இன்ஃபி ளிப்நெட்) தகவல் மற்றும் நூலக வலை வமைப்பு மையத்தை (இன்ஃபர்மேஷன் அண்ட் லைப்ரரி நெட்வொர்க் சென்ட்டர்) குஜராத் மாநிலம் காந்தி நகரில் நிறுவியுள்ளது. இந்த வலையமைப்பில் இந்தி அறிவையும்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் களஞ்சியமாகப் பராமரிக்கப்படுகின்றன. இணைய தளங்களில் இ-புத்தக தளங்களில் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை பதிவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

என்டிஎல்ஐ சங்கம் (என்டிஎல்ஐ கிளப்) என்பது இந்திய தேசிய எண்ம நூலகத்தின் (நேஷனல் டிஜிட்டல் லைஃப்ரரி ஆஃப் இந்தியா) ஒரு பகுதியாகும். இந்தச் சங்கம். நாட்டில் உள்ள அனைவருக்கும் எண்ம முறையில் கல்விசார் வளங்களை எளிதில் அணுகக்கூடிய ஓர் இயக்கமாகும். இது பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு துறைகளில் எண்ம கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.

தினமும் குறைந்தது 30 நிமிஷங்களாவது வாசிக்க ஒதுக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பெற்றோர் ஊக்குவித்தால் அதன் முக்கியத்துவத்தை வருங்கால இளைய தலைமுறையினரும் பின்பற்றுவர். தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த புத்தகங்களைப் பரிசளித்து, நூலகங்களுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச் சென்று அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தலாம்.

ஒருவர் தொடக்க நிலையாளராக இருந்தால், அவர்கள் தங்களுக்கு ஆர்வ முன்னபகுதியின் அடிப்படையில் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம். படிப்படியாக வாசிப்புப்பழக்கத்தை மேற்கொண்டு அதை ரசிக்கத் தொடங்குவார்கள். கைப்பேசியில் தேவையில்லாத வவைதளங்களில் நேரத்தை விரயமாக்காமல், இத்தகைய உபயோகமான வலைதளங்களைப் பயன்படுத்தி அறிவுச்சிந்தனையை வளர்க்கலாம்.

குறிப்பாக இளைய தலைமுறையினர் இணையதளங்களில் மூழ்சி இணைய விளையாட்டுகளிலும், பயனில்லாத குறும் பதிவுகள் அல்லது சிறு காணொலிகள் என்று தங்களது முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர். எனவே, சமுதாயத்தைச் சீர்படுத்த வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாசிப்புப் பழக்கமும் தியானத்துக்கு இணையானது. மனமகிழ்ச்சிக்கும் தேவை யற்ற சிந்தனைகளில் இருந்து விடுபடவும் வாசிப்புப் பழக்கம் வழிவகுத்து பல நன் மைகளைத் தருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக்கழகங்களில் வாசகர் வட்டத்தை உருவாக்கி புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையும் அவை குறித்த விவாதங்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

புத்தகங்களோடு உரையாடுவோம்! புத்தகங்களோடு உறவாடுவோம்!

கட்டுரையாளர்:

– முனைவர் அ.முஷிரா பானு

நன்றி: தினமணி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *