வில்லியம் விக்ரி (William Vickrey) ஜூன் 21, 1914இல் பிறந்து அக்டோபர் 11, 1996இல் மறைந்த கனடாவில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் முழுமையற்ற அல்லது சமச்சீரற்ற (asymmetrical) தகவல்களின் சிக்கல்களுக்குப் புதுமையான பகுப்பாய்வைக் கொண்டு வந்தார். பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் ஏ. மிர்லீஸுடன் சேர்ந்து அவர் வழங்கிய சமச்சீரற்ற தகவல் ஆய்விற்காக 1996ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். வருமான வரிவிதிப்பு முதல் ஏல வடிவமைப்பு வரை, சுரங்கப்பாதை கட்டணங்கள் மற்றும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் வரையிலான களங்களில் ஆயவிட்டதில் வில்லியம் விக்ரி தனது வாழ்க்கையைச் செலவிட்டார். இந்தச் செயல்பாட்டில், அவர் சில குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்புகளைச் செய்தார்.
பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குச் செல்வத்தை மறுபகிர்வு செய்ய வரி முறையைப் பயன்படுத்துவதில் உறுதியான நம்பிக்கை கொண்ட விக்ரி, இதுபோன்ற கட்டாய இடமாற்றங்கள் மக்களின் வேலைக்கான ஊக்கத்தைக் குறைக்கும் என்பதைக் கண்டார். அதிக வருமானம் உள்ளவர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த விளிம்பு வரி விகிதங்களை அவர் ஆதரித்தார். மூடிய உறையிடப்பட்ட ஏல முறையினை விக்ரி தொடக்க காலங்களில் பங்களிப்புகளைச் செய்தார். இரண்டாவது விலை ஏலத்தில், அதிக விலை ஏலம் எடுப்பவர் பொருளைப் பெறுகிறார், ஆனால் இரண்டாவது அதிக விலை ஏலதாரரின் விலை ஏலத்தை மட்டுமே செலுத்துகிறார், இதன் விளைவாக அதன் மதிப்பு அதிகமாக இருக்கும் நபருக்குப் பொருள் ஒதுக்கப்படும் என்பதை அவர் நிரூபித்தார். அதிக விலை ஏலம் எடுப்பவர், பொருளின் உண்மையான மதிப்பை தனக்கு ஏலம் எடுக்க முடியும் என்பதை அறிவார், ஏனெனில் அவர் வெற்றி பெற்றால் அந்த மதிப்பைச் செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிடுகிறார்.
Congestion Pricing (நெரிசல் விலை நிர்ணயம்)
“நெரிசல் விலை நிர்ணயத்தின்” தந்தையாக விக்ரி கருதப்படுகிறார். நியூயார்க் நகரச் சுரங்கப்பாதை அமைப்புக்காக 1952ஆம் ஆண்டு முதன்முதலில் இம்முறையினை முன்மொழிந்தார், போக்குவரத்தில் அதிக அளவிலான நெரிசல் அதிக உள்ள பகுதிகளில் கட்டணங்களை அதிகரிக்கவும், மற்றவற்றில் குறைக்கவும் பரிந்துரைத்தார். ஆனால் நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள், இம்முறையானது அதிக ஆபத்தானது என்றும் இதற்கான தொழில்நுட்பம் தயாராக இல்லை என்றும் உணரப்பட்டது. பின்னர், சாலைப் போக்குவரத்திற்கான விலை நிர்ணயத்திற்கும் இதேபோன்ற திட்டத்தை அவர் முன்வைத்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில் சாலைகள் மற்றும் பாலங்களில் சுங்கச்சாவடிகள் பொதுவானவை என்றும், மேலும் இது அக்கால கட்டங்களில் பொருளாதார பாடப்புத்தகங்களில் விவாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரி போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிக கட்டணங்களை விதிப்பது என்ற தீர்வுதான் சரியானது என்றும் இதனால் நெரிசல்கள் குறையும் என்கிறார். இதன் வழியாக புதிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுகளை செயல்படுத்த முடியும் என்றும், இத்தகைய கட்டண விதிப்பினால் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். இச் செலவினை எதிர்கொள்ள ஓட்டுனரகள் அதற்குப் பதிலாக கார்பகிர்வு முறை அல்லது பொதுப் பேருந்துகள் பயன்படுத்தும் நடைமுறை வலுப் பெறும் என்று குறிப்பிட்டார்.
விக்ரி கொலம்பியாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பணியாற்றிய அவர், நடைமுறைச் சிக்கல்களுக்கு நேர்த்தியான மற்றும் சிக்கலான தீர்வுகளைக் கண்டறிந்ததற்காகப் போற்றப்பட்டார், இருப்பினும் 82 வயதில் நோபல் பரிசைப் பெறுவதற்கு முன்பு அவர் தனது துறைக்கு வெளியே நன்கு அறியப்படவில்லை. விக்ரி 1961இல் ஏலக் கோட்பாட்டுத் துறையை நிறுவினார். தற்போது விக்ரி ஏலம் என்று அழைக்கப்படுவதை அவர் உருவாக்கினார், இது மூடிய உறையிடப்பட்ட ஏலத்தை மிகவும் திறமையானதாக மாற்றுகிறது, இது ஏலதாரர் பணம் செலுத்த விருப்பம் காட்டுவதை உறுதி செய்-கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்
www.econlib.org; www.econ.columbia.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

