ஜூன் 22 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மைக்கேல் கலெக்கி (Economist Michal Kalecki Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மைக்கேல் கலெக்கி – முனைவர் பு. அன்பழகன்

மைக்கேல் கலெக்கி (Michal Kalecki) ஜூன் 22, 1899இல் பிறந்து ஏப்ரல் 18, 1970இல் மறைந்த போலந்து நாட்டினைச் சார்ந்த மார்க்சிய பொருளாதார அறிஞர் ஆவர். கலெக்கி புகழ்பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் வார்சா பொருளாதாரப் பள்ளி ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார், மேலும் போலந்து, பிரான்ஸ், கியூபா, இஸ்ரேல், மெக்சிகோ மற்றும் இந்தியா அரசாங்கங்களுக்குப் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார். நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் துறையின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கலெக்கி அடிப்படையில் ஒரு பொறியல் கல்வியில் பயிர்சி பெற்றவர் ஆவார், ஆனால் அவர் பொருளாதாரத்தை சுயமாகக் கற்றுக்கொண்டார். கார்ல் மார்க்ஸ் மற்றும் ரோசா லக்சம்பர்க் போன்ற எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்டார். கலெக்கி பேரியல் பொருளாதாரத்தின் கொண்டாடப்படாத கதாநாயகர்களில் ஒருவர் ஆவார். கீன்ஸின் பொதுக் கோட்பாட்டில் கூறப்பட்டுள்ள கொள்கைகளில் பெரும்பாலானவற்றை எதிர்பார்த்ததாகக் கலெக்கி கூறினார். அவரது கட்டுரைகள் போலந்து மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்டன, இம் மொழியில் வெளியிட்டதன் காரணமாக அவருடைய பங்களிப்புகள் சரிவர அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Business cycle (வணிகச் சுழற்சி)

ஆங்கிலத்தில் காலெக்கியின் படைப்பு, குறிப்பாக வணிக சுழற்சிகள், அவரை பரந்த அளவிற்கு கல்வியாளர்களிடையே அறிமுகப்படுத்தியது மற்றும் பொருளாதாரத்தில் கணித இயக்கவியலின் பயன்பாட்டினையும் அறிமுகப்படுத்தினார். அவரது படைப்புகள் பல தொன்மைப் பொருளாதார அறிஞர்கள் மற்றும் மார்க்சியக் கருத்துகளையும் உள்ளடக்கியது. அவருடைய பங்களிப்பானது, வர்க்க மோதல், வருமான பகிர்வு மற்றும் நிறைவற்றப் போட்டி ஆகியவை முக்கிய களங்களாகக் கொண்டிருந்தது. கேம்பிரிட்ஜ் பொருளாதார அறிஞர்கள், கீன்ஸியப் பொருளாதார அறிஞர்கள் குறிப்பாக ராபின்சன், கால்டோர் மற்றும் குட்வின் போன்றவர்களுடன், கீன்ஸிற்குப் பிந்தைய அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதார அறிஞர்கள் ஆகியோரின் தாக்கங்கள் இவருடைய எழுத்துக்களில் காணப்பட்டது.

காலெக்கியின் வணிகச் சுழற்சி கோட்பாட்டனது, தொன்மை கோட்பாட்டிற்கு எதிரானதாகவும், சந்தை சக்திகள் முதலாளித்துவப் பொருளாதாரங்களை அனைத்து வளங்களும் முழுமையாகப் பயன்படுத்தி ஒரு நிலையான சமநிலைக்கு இட்டுச் செல்வதில்லை என்றும், மாறாக அந்தப் பொருளாதாரங்கள் ஏற்றம் மற்றும் சரிவுகளுக்கு இடையில் இயற்கையாகவே ஊசலாடுகின்றன என்பதைக் காட்டுகிறது. வணிகச் சுழற்சி பற்றிய காலெக்கியின் விளக்கத்தின் மையக் கருத்து, பொருளாதார நடவடிக்கைகளில் முதலீடு ஏற்படுத்தும் செல்வாக்கு மற்றும் அதனால் முதலீட்டைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகும் என்பதாகும்.

Aggregate Demand and Investment (மொத்த தேவை மற்றும் முதலீடு)

மொத்த தேவையின் அளவு பொருளாதார நடவடிக்கைகளின் அளவை தீர்மானிக்கிறது என்பதும், முதலீட்டு முடிவுகள் தேவையின் அளவை தீர்மானிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்கக் காரணியாகும் என்பதும் காலெக்கியின் வழங்கலின் ஒரு முக்கிய அம்சமாகும். நிதி கிடைத்து வங்கி அமைப்பு மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே முதலீட்டுச் செலவினங்களை அதிகரிப்பதற்கான எந்தவொரு முடிவும் பலனளிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். உண்மையான முதலீட்டுச் செலவு அதற்கேற்ப சேமிப்பை உருவாக்குகிறது என்கிறார். சேமிப்புகள் முக்கியமாக லாபத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன என்று காலெக்கி வாதிட்டார், மேலும் அவர் பெரும்பாலும் முதல் தோராயமாக, தொழிலாளர்கள் சேமிக்கவில்லை என்று கருதினார்; எனவே, மொத்த முதலீட்டுச் செலவு லாபத்தின் அளவை தீர்மானிக்கிறது என்ற முடிவிற்கு வருகிறார்.

Capitalism (முதலாளித்துவம்)

காலெக்கியின் படைப்பு, கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் மீது வைத்த விமர்சனத்தைவிடவும், அவருடைய சமகால விமர்சனத்தைவிடக் கூர்மையானதாகவும், அதுபோல் கீன்ஸ் அளித்த விமர்சனத்தைவிடவும் கூர்மையானதாகவும் உள்ளது. முதலாளித்துவம் மட்டுமல்ல, வளர்ச்சியடையாத மற்றும் மையப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதாரங்கள் பற்றிய சிந்தனைக்கு காலெக்கியின் மதிப்புமிக்க மற்றும் நீடித்த பங்களிப்புகள், அவரது முக்கியத்துவம் பொதுவாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்கின்றன.

ஆதாரம்: www.hetwebsite.net; www.jacobin.com; www.encyclopedia.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *