ஜேம்ஸ் எட்வர்ட் மீட் (James Edward Meade) ஜூன் 23, 1907இல் பிறந்து டிசம்பர் 22, 1995இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பன்னாட்டு மூலதன இயக்க கோட்பாட்டிற்கு ஜேம்ஸ் மீட்டின் முன்னோடியான பங்களிப்பிற்காக 1977ஆம் ஆண்டில் பெர்டில் ஓலினுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்றார். மீட் தனது நோபல் பரிசுத் தொகையில் ஒரு பாதியை எல்எஸ்இ நூலகத்திற்கும், மற்ற பாதியை கேம்பிரிட்ஜில் உள்ள மார்ஷல் நூலகத்திற்கும் நன்கொடையாக வழங்கினார்.
தேசிய வருமானக் கணக்கியல், பொருளாதார வளர்ச்சி, பொது நிதி, நலப் பொருளாதாரம், பேரியல் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஜேம்ஸ் எட்வர்ட் மீட் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்தார். இரண்டாம் உலகப் போரின்போது போர் பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார் மற்றும் தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தில் (1946–47) முன்னணி பொருளாதார நிபுணராக இருந்தார். லண்டன் பொருளாதாரப் பள்ளி (1947–57) மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் (1957–68) அவர் தலைமைப் பதவிகளை வகித்தார். உணவுப் பொருட்களின் நியாயமாக முறையில் பகிர்தல் (Rationing) மற்றும் தேசியமயமாக்கப்பட்ட தொழில்களுக்கான விலை நிர்ணயக் கொள்கைகளை நிர்ணயித்தல் போன்ற அன்றாட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜான் மேனார்ட் கீன்ஸுடன் சேர்ந்து லியோனல் ராபின்ஸின் வழிகாட்டுதலின் கீழ் மீட் பணியாற்றினார்.
Theory of International Economics (சர்வதேச பொருளாதாரக் கோட்பாடு)
மீடின் தொடக்காலத்திய முக்கியமான படைப்புகளில் பன்னாட்டுப் பொருளாதாரக் கொள்கையின் கோட்பாடு ஒன்றாகும், இது இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது அவை, செலுத்து நிலை இருப்பு (1951) மற்றும் வர்த்தகம் மற்றும் நலச்சார்பு (1955) ஆகும். பல்வேறு பண மற்றும் நிதிக் கொள்கைகளின் விளைவுகளைச் செலுத்துச் சமநிலையில் (balance of payment) காட்ட வடிவமைக்கப்பட்ட ஒரு மாதிரியில் கீன்ஸியன் மற்றும் புதிய தொன்மைப் பொருளாதார கூறுகளை ஒருங்கிணைக்க அவர் முயன்றார். பல்வேறு வகையான வர்த்தகக் கொள்கைகளின் பொருளாதார நலனில் ஏற்படும் விளைவுகளை மீட் ஆராய்ந்தார். வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதன் நலன்சார் விளைவுகள் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்கினார். மீடின் ஆய்வானது பின்னர் வர்த்தக பாகுபாடு மற்றும் போதுமான பாதுகாப்பு குறித்த பணிகளுக்கும் வழிவகுத்தது.
Equallity (சமத்துவம்)
உலகை மேம்படுத்தப் பொருளாதாரத்தைப் பயன்படுத்த மீட் முயன்றார், மேலும் அரசாங்கங்களின் ஒழுங்குமுறையானது பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது என்று குறிப்பிடுகிறார். வருமான சமத்துவத்தை ஊக்குவிக்க அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் நம்பினார். சரியான பொருளாதாரக் கோட்பாட்டினை பயன்படுத்தி, வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மையினை இணைக்க முடியும் என்பதை நிரூபித்தார். போட்டியின் நன்மைகள் சமத்துவத்தை மேம்படுத்தும் என்றும் இதற்கான பொதுக் கொள்கைகளை வடிவமைக்கப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
Market (சந்தை)
ஜேம்ஸைப் பொறுத்தவரை, பொருளாதாரம் என்பது மிதமான மற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றியது, இது சந்தைப் பொருளாதாரத்தை நியாயமானதாகவும் திறமையானதாகவும் மாற்றும், நிலையான விலைகள் மற்றும் முழு வேலைவாய்ப்புடன் வளர்ச்சியை அனுமதிக்கும் என்று குறிப்பிட்டார்.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.blogs.lse.ac.uk; www.kids.britannica.com; www.christs.cam.ac.uk; www.thefamouspeople.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

