எட்வின் ஸ்மித் மில்ஸ் III (Edwin Smith Mills III) ஜூன் 25, 1928இல் பிறந்து அக்டோபர் 29, 2021இல் மறைந்த நகர்ப்புற பொருளாதாரத்தில் தனது பங்களிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஒரு அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார். மில்ஸின் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் எழுத்துக்களானது, மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) மற்றும் நகர்ப்புற பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளன. அவர் Journal of Urban Economics ஆசிரியராகவும், Journal of Real Estate Finance and Economics இணை ஆசிரியராகவும் இருந்தார். ஜப்பான், தென் கொரியா, இந்தியா மற்றும் தாய்லாந்தில் நகர்ப்புற மேம்பாடு பற்றி மில்ஸ் எழுதியுள்ளார். அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் பல தனியார் நிறுவனங்கள் உட்படப் பல அரசு நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.
Standard Urban Land-use Model (நிலையான நகர்ப்புற நிலப் பயன்பாட்டு மாதிரி)
இந்த மாதிரி நகர்ப்புற இடஞ்சார்ந்த கட்டமைப்பையும் காலப்போக்கில் அது எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதையும் விளக்குகிறது. நகர்ப்புற இடஞ்சார்ந்த கட்டமைப்பு என்பது நகரங்களுக்குள் மாற்று நிலப் பயன்பாடுகளின் (அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் போன்றவை) பரவலையும், பல்வேறு வருமானக் குழுக்களின் பரவலையும் குறிக்கிறது. இந்த மாதிரியின் பயன் பன்முகத்தன்மை கொண்டது, அலுவலகங்கள் பெருநகரப் பகுதிகளின் மையத்தில் ஏன் குவிந்துள்ளன, ஏன் அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை விட மையத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்க முனைகின்றன, மற்றும் பல வீடுகள் மற்றும் நிறுவனங்கள் ஏன் மத்திய நகரத்திலிருந்து புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன போன்ற கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது. மக்கள்தொகை அடர்த்தியை மதிப்பிடுவதற்கான முறைகளை அவர் உருவாக்கினார், இது பெருநகரப் பகுதியின் மையத்திலிருந்து தூரம் அதிகரிக்கும் போது ஒரு சதுர மைலுக்கு மக்கள் தொகை எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.
மில்ஸின் ஆராய்ச்சி, புறநகரமயமாக்கல் என்பது இயற்கையான பரிணாம வளர்ச்சியின் விளைவாகும், இது அதிக உண்மையான வருமானம் மற்றும் நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சியால் இயக்கப்படுகிறது, மேலும் மத்திய நகரங்களுக்குள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து தப்பிக்க வீடுகளும் நிறுவனங்களும் மத்திய நகரத்திலிருந்து புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. அவரது எழுத்துக்கள் ஏராளமான நகர்ப்புற பிரச்சினைகள் (காற்று மற்றும் நீர் மாசுபாடு, வீட்டுவசதி பிரித்தல் மற்றும் நகர்ப்புற சிதைவு போன்றவை) மற்றும் அவற்றைத் தீர்க்க என்ன செய்யப்படலாம் என்பதைப் பற்றிய புரிதலையும் விரிவுபடுத்தியுள்ளன. அதிகப்படியான அரசாங்க தலையீடு இல்லாமல் சந்தைகள் மிகவும் திறமையாகச் செயல்பட அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை அவரது கொள்கை பரிந்துரைகள் வலியுறுத்தியுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
Alonso, W. (1964): Location and Land Use: Toward a General Theory of Land Rent, Cambridge, MA: Harvard University Press.
Mills, E.S. (1972): Studies in the Structure of the Urban Economy Baltimore< MD: Johns Hopkins University Press.
Mills, Edwin S and Bruce W. Hamilton (1994): Urban Economics, 5th ed., New York: Harper Collins.
ஆதாரம்: www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

