ஜூன் 27 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரவீந்திரநாத் "ரவி" பத்ரா (Economist Ravi Batra Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 27 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரவீந்திரநாத் “ரவி” பத்ரா – முனைவர் பு. அன்பழகன்

ரவீந்திரநாத் “ரவி” பத்ரா (Raveendranath “Ravi” Batra) ஜூன் 27, 1943இல் பிறந்த இந்திய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். பத்ரா ஆறு சிறந்த புத்தகங்களை எழுதியவர், அவற்றில் இரண்டு தி நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாளர் பட்டியலில் இடம்பெற்றன, இதில் ஒன்று The Great Depression of 1990, இது புத்தக விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது. நிதி முதலாளித்துவம், அதிகப்படியான சமத்துவமின்மை மற்றும் அரசியல் ஊழலை உருவாக்குகிறது, இது தவிர்க்க முடியாமல் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகிறது என்ற அவரது கருத்தை அவரது புத்தகங்கள் மையமாகக் கொண்டுள்ளன.

தனது படைப்புகளில், பொருள் நலனை மட்டுமல்ல, அனைவரும் முழு ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் திறனைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாக முற்போக்கான பயன்பாட்டுக் கோட்பாடு (PROUT) எனப்படும் சமமான விநியோக முறையை பத்ரா முன்மொழிந்தார். 1978ஆம் ஆண்டில், அவர் The Downfall of Capitalism and Communism: A New Study of History என்ற நாவல் புத்தகத்தை வெளியிட்டார், அதில் அவர் தனது பார்வையைத் தத்துவார்த்த பொருளாதாரத்திலிருந்து வரலாற்றுக்குத் திருப்பினார். இப் புத்தகத்தில், பத்ரா சமூக சுழற்சி கோட்பாட்டை ஊக்குவித்தார். பொருளாதார சமத்துவமின்மை பொருளாதார செயல்திறன் மற்றும் சமூக மாற்றத்தைப் பாதிக்கிறது என்று பத்ரா கோட்பாட்டுப்பத்தியுள்ளார். சமத்துவமின்மையின் குறிகாட்டியாகவும், மந்தநிலைகளின் முக்கிய தீர்மானகரமாகவும், 1% பணக்காரர்கள் வைத்திருக்கும் செல்வத்தின் பங்கு, என்ற கருத்தை அவர் பிரபலப்படுத்தினார்.

Capitalism (முதலாளித்துவம்)

பரவலான சமத்துவமின்மை மற்றும் ஊகங்கள் காரணமாக முதலாளித்துவம் சில தசாப்தங்களுக்குள் சரிந்துவிடும் என்ற பத்ராவின் கணிப்பு நிறைவேறவில்லை. உள் தேக்கம் மற்றும் ஒடுக்குமுறை காரணமாகக் கம்யூனிசத்தின் சரிவுக்கான அவரது கணிப்பு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 1990இல் வந்தது. சுயமாக நிலைத்து நிற்கும் சமூக உருவாக்கமாக முதலாளித்துவம் ஒரு நீடித்த பாதையில் செல்வதாகக் காணப்பட்டதற்கான முக்கிய காரணம், அதிக மூலதனத்தைப் பெறுவதற்கான கையகப்படுத்துபவர்களின் இடைவிடாத உந்துதலாகும். காலப்போக்கில், இந்த செயல்பாடு வேகம் பெற்றது, இதன் விளைவாக நிதி ஏற்றம் மற்றும் வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் ஒரு மந்தநிலை ஏற்படும், மேலும் அது தீவிர சமத்துவமின்மையின் மேல் வரும்போது, அது விரைவாக சமூக குழப்பத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

1984ஆம் ஆண்டில், Regular Cycles of Money, Inflation, Regulation and Depressios என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தின் மையக் கருப்பொருள் செல்வத்தின் தவறான விநியோகம் ஆகும், இது நிதி ஊக வெறியின் கடந்த கால அத்தியாயங்களுக்குக் காரணமாக பத்ரா கண்டறிந்தது, அதைத் தொடர்ந்து சரிவுகள் மற்றும் மந்தநிலைகள் ஏற்பட்டன. பத்ராவின் படைப்புகள் The New York Times, The Wasington Post, USA Today, Time, Newsweek, US News & World Report உள்ளிட்ட முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.

ஜூன் 2015இல், ஐஸ்லாந்து ஜனாதிபதி வறுமை ஒழிப்பு குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அவரை அழைத்தார். அவரது 2015இல் End Unemployment Now: How to Eliminate Joblessness, Debt and Poverty Despite Congress என்ற புத்தத்தை வெளியிட்டார். ரவி பத்ரா, தற்போது டல்லாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஆதாரம்

www.alchetron.com; www.simonandschuster.com.au; www.apekmulay.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *