ஜூன் 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்: முகமது யூனுஸ் (Muhammad Yunus) பற்றிய கட்டுரைக்கான வண்ண ஓவிய வடிவ சிறப்புப் படம்; கீழே எழுத்தாளர் முனைவர் பு. அன்பழகன் அவர்களின் வட்டப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஜூன் 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முகமது யூனுஸ் – முனைவர் பு. அன்பழகன்

முகமது யூனுஸ் (Muhammad Yunus) ஜூன் 28, 1940இல் பிறந்த ஒரு வங்காளதேச சமூக தொழில்முனைவோர், வங்கியாளர், பொருளாதார நிபுணர் மற்றும் உரிமையியல் சமூகத் தலைவர் ஆவார், இவர் Grameen Bank (கிராமீன் வங்கி) நிறுவியதற்காகவும், மைக்ரோ ஃபைனான்ஸ் (நுண் நிதி) மற்றும் மைக்ரோ கிரடிட் (நுண் கடன்) கருத்துக்களுக்கு முன்னோடியாகவும் செயல்பட்டதற்காக 2006ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

யூனுஸ் Chittagong University இல் பேராசிரியராகவும், 2012-2018 காலகட்டங்களில் of Glasgow Caledonian University in Scotlandஇல் துணைவேந்தராகவும் பணியாற்றினார். யூனுஸ் பல புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் முக்கியமானவை, Building Social Business: The New Kind of Capitalism that Serves Humanity’s Most Pressing Needs, Banker to the Poor: Micro-Leading and the Battle Against World Poverty, A World of Three Zeros: The New Economics of Zero Pverty, Zero Unemployment and Zero Net Carbon Emissions, and Creating a World, Without Poverty: Social Business and the Future of Capitalism. யூனுஸ் ஆகஸ்ட் 8, 2024 முதல் பிப்ரவரி 16, 2026 முடிய வங்காளதேசத்தின் இடைக்கால அரசின் ஐந்தாவது தலைமை ஆலோசகராக பணியாற்றினார .

Banker to the Poor (ஏழைகளுக்கு வங்கியாளர்)

யூனுஸ் அமெரிக்காவிலிருந்து ஆய்வுப் படிப்பினை முடித்துத் திரும்பிய நேரத்தில், வங்கதேசத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறு தொழில்களைத் தொடங்க ஏழைகளுக்கு மூலதனம் தேவை என்பதையும், வங்கிகள் பொதுவாக அவர்களுக்கு உதவத் தயாராக இல்லை என்பதையும், கோரிக்கைகளை முற்றிலுமாக மறுப்பதோ அல்லது அதிக வட்டி விகிதங்களை வசூலிப்பதைக் கண்டார்.

1976ஆம் ஆண்டில், யூனுஸ், உள்ளூர் பெண்கள் சொந்தமாக தங்களின் உழைப்பினை நல்கி உற்பத்தி செய்வதற்கான தேவையான மூலப் பொருட்களை வாங்க வேண்டிய சிறிய தொகையைக் கடனாக வழங்கினார். பாரம்பரிய வங்கிகள் பிணையம் இல்லாமல் மக்களுக்குக் கடன்களையோ அல்லது கடன் வரிகளையோ வழங்காது; ஆனால், கலாச்சாரத்தில் மிகவும் ஏழ்மையானவர்கள் நுண் நிதி மற்றும் நுண் கடன்கள் மூலம் தங்கள் சிறு வணிக நடவடிக்கைகளையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்த முடியும் என்று யூனுஸ் நம்பினார்.

இது 1983இல் கிராமீன் வங்கியாக மாறியது. ஜூன் 2020 வாக்கில், கிராமீன் வங்கி உலகின் ஏழ்மையான மக்களுக்கு 30.48 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை வழங்கியது. ஏழை மக்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் கடன்களை வழங்குவதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட உதவுவதே அவரது நோக்கமாக இருந்தது. இலங்கையில் மனிதாபிமான விருது (1993), அமெரிக்காவில் உலக உணவு பரிசு (1994), வங்கதேசத்தின் மிக உயர்ந்த விருது, ஜோர்டானில் வால்வோ சுற்றுச்சூழல் பரிசு (2003) அமெரிக்காவின் Congressional Gold Medal (2013) உள்ளிட்ட விருதுகள் அவரது கருத்துக்கள் மற்றும் முயற்சிகளுக்காக யூனுஸ் பன்னாட்டளவில் வழங்கப்பட்டுள்ளது. யூனுஸின் நுண் நிதி செயல்பாட்டினை உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் (வளர்ந்த நாடுகள் உட்பட) பின்பற்றி சமூகம் பொருளாதார அளவில் மேம்பட நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.investopedia.com; www.nobelprize.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *