பி.சி.மகாலனோபிஸ் (P.C.Mahalanobis or Prasanta Chandra Mahalanobis) ஜூன் 29, 1893இல் பிறந்து ஜூன் 28, 1972இல் மறைந்த இந்தியப் புள்ளிவிவர நிபுணர் ஆவார். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1956–61) இந்தியாவின் தொழில்மயமாக்கல் உத்தியை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மகாலனோபிஸ் இரண்டு தரவுத் தொகுப்புகளுக்கு இடையிலான ஒப்பீட்டு அளவை வகுத்தார், இப்போது இது மகாலனோபிஸ் தூரம் (Mahalanobis devised) என்று அழைக்கப்படுகிறது.
அதிக அளவிலான மாதிரி கணக்கெடுப்புகளை நடத்துவதற்கும், சீரற்ற மாதிரி முறையைப் பயன்படுத்தி நிலப்பரப்பு மற்றும் பயிர் விளைச்சலைக் கணக்கிடுவதற்கும் புதுமையான நுட்பங்களை அவர் அறிமுகப்படுத்தினார். பல்வேறு குழுக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படும் Fractile graphical analysis (ஃபிராக்டைல் கிராஃபிகல் பகுப்பாய்வு) என்ற புள்ளிவிவர முறையை அவர் வகுத்தார். வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொருளாதாரத் திட்டமிடலுக்கும் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தினார்.
சராசரி செலவு, குடிக்கும் பானப் பழக்கவழக்கங்கள், மக்கள் உணர்வு, பயிர் பரப்பளவு மற்றும் தாவர நோய் ஆகியவை 1937 மற்றும் 1944க்கும் இடையில் தொடக்கக்காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். மஹலனோபிஸ் 1950இல் இந்தியாவின் முக்கிய கணக்கெடுப்பான National Sample Surveyu (தேசிய மாதிரி கணக்கெடுப்பை) நிறுவினார், மேலும் இந்தியாவில் புள்ளிவிவர நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க Central Statistical Organisation (மத்திய புள்ளிவிவர அமைப்பையும்) நிறுவினார். புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாட்டில் வறுமை மற்றும் சமத்துவமின்மையை மதிப்பிடுவதற்குத் தேசிய மாதிரி கணக்கெடுப்பு பல மதிப்புமிக்க கணக்கெடுப்புகளை நடத்தியது, இது கொள்கை வகுப்பார்களுக்குப் பெரிதும் உதவியது.
திட்டக் குழுவானது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம், இந்தியப் பொருளாதாரம் குறித்த மஹலனோபிஸின் கணித விளக்கத்தை நம்பி, இந்தியாவில் கனரகத் தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தது, இது பின்னர் மஹலனோபிஸ் மாதிரி என்று அறியப்பட்டது. 1947 முதல் 1951வரை, அவர் ஐக்கிய நாடுகளின் மாதிரிக்கான துணை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றினார், மேலும் 1949இல், அவர் இந்தியாவின் கௌரவ புள்ளிவிவர ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
மஹலனோபிஸ் இந்தியப் பொருளாதாரத் திட்டமிடலின் சிற்பி, புள்ளிவிவர ஆராய்ச்சியின் முன்னோடி, அரசின் பல அமைப்பின் நிறுவனராகவும் அறியப்படுகிறார். அவர் நவீன புள்ளிவிவரங்களின் தந்தை மற்றும் இந்தியப் புள்ளிவிவரங்களின் தந்தை ஆவார். புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறைகளில் மஹலனோபிஸ் செய்த குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய அரசு ஜூன் 29ஆம் தேதி அவரது பிறந்தநாளை ” புள்ளிவிவர தினமாக” கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.britannica.com; www.unacademy.com; www.livemint.com; www.geeksforgeeks.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

